மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசு - ஆளுநர் இடையே மோதல் போக்கு அடிக்கடி ஏற்பட்டது.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதலமைச்சர் பதவியை உத்தவ் தக்கரே ராஜினாமா செய்தார். பிறகு இதனை தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.
இதையும் படிங்க..அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு
மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கியது உண்டு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சத்ரபதி சிவாஜி அந்த காலத்தின் அடையாளம். அம்பேத்கர், நிதின் கட்காரி ஆகியோர் இந்த காலத்தின் அடையாளம் என கடந்த ஆண்டு பேசியிருந்தார். பகத்சிங் கோஷ்யாரியின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இதற்கு அடுத்த நாளே, மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது என்று மீண்டும் சர்ச்சை பேச்சை கிளப்பினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், மகராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.
பதவி விலகல் முடிவை ஆளுநர் கோஷ்யாரி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!
இதையும் படிங்க..Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!