இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட நாயை காண பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
பெல்லாரியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான காகசியன் ஷெப்பர்ட் என்ற நாயினை பார்க்க மக்கள் குவிந்தனர்.
கடாபோம் ஹைடர் என்ற நாய் 14 மாத வயதுடையது என்றும் இது இந்தியாவில் உள்ள அரிய வகை நாய் என்றும் சதீஷ் கூறினார். சமீபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், நாய்க்கு ரூ.20 கோடி கொடுக்க முன்வந்தார். இதுபற்றி பேசிய நாயின் உரிமையாளர் சதீஸ், இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட நாய் இதுதான்.
இதையும் படிங்க..Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!
இதன் பராமரிப்புக்காக தினமும் 2,000 ரூபாய் செலவிடுகிறேன். பெங்களூரில் இருந்து பெல்லாரிக்கு உயர்தர, குளிரூட்டப்பட்ட காரில் கொண்டு சென்றோம். இதற்கு முன்பு என்னிடம் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கொரிய மாஸ்டிஃப் மற்றும் ரூ.8 கோடி மதிப்புள்ள அலாஸ்கன் மாலாமுட் இருந்தது. என்னிடம் இரண்டு காகசியன் ஷெப்பர்ட் நாய்க்குட்டிகள் உள்ளது. அவற்றை தலா 5 கோடி ரூபாய்க்கு விற்க மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்’ என்று கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த கண்காட்சியில் பங்கேற்குமாறு சதீஷிடம் கோரிக்கை வைத்தோம். பல்வேறு பிரிவுகளில் சிறந்த மூன்று நாய்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இந்த நாய் கண்காட்சியில் 55 வகையான நாய்கள் பங்கேற்றன. ஆர்வமுள்ள உள்ளூர் எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டியும் கடபோம் ஹைடருடன் புகைப்படம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!
இதையும் படிங்க..ஆளுநர் பதவியே வேண்டாம்.. மகாராஷ்டிரா ஆளுநர் அதிரடி ராஜினாமா - யார் இந்த பகத்சிங் கோஷ்யாரி ?