karnataka bjp : கர்நாடகாவை பதறவைக்கும் அடுத்தடுத்த 3 கொலைகள்: என்ன நடக்கிறது? அடுத்த தேர்தலில் பாஜக வெல்லுமா?

By Pothy RajFirst Published Jul 29, 2022, 12:52 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளதையடுத்து, பெரிய மதரீதியான மோதலுக்கு இட்டுச் செல்வதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளதையடுத்து, பெரிய மதரீதியான மோதலுக்கு இட்டுச் செல்வதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அடிக்கடி மதரீதியான மோதல்கள் நடப்பதும், பதற்றமான சூழல் அடிக்கடி இருப்பதும் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கர்நாடகாவின் கடற்கரை பகுதியான தட்சின கன்னடாவில்தான் சமீபத்தில் 3 இளைஞர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இவர்கள் கொலைப்பப்பின் அங்கு மதரீதியான மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 144 தடை உத்தரவு பதற்றமான பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை செஸ் ஒலிம்பியாட்.. மாஸ் காட்டும் மு.க. ஸ்டாலின்.. மாநில முதல்வர்கள் வரிசையாக வாழ்த்து.!

முதலில் கடந்த 20ம் தேதி சுலியா தாலுகாவில் உள்ள களஞ்சா கிராமத்தில் 18வயதான இளைஞர் மசூத் என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியது, படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மசூத் அங்கு உயிரிழந்தார். இதையடுத்து, பெல்லாரி போலீஸார் விசாரணைநடத்தி, மசூத் கொலையில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்தனர்.

கடந்த 26ம் தேதி, 31வயதான பாஜக நிர்வாகி பிரவீன் குமார் நெட்டாராவை ஒரு கும்பல் தாக்கியது. பெல்லாரி நகரில் பிரவீன் கடைக்கு முன்  அவரை அந்தக் கும்பல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த கொலையில் போலீஸார் இருவரை கைது செய்தனர், 20 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்

இதற்கிடையே சுரத்கால் நகரில் உள்ள துணிக்கடை முன்பு, 23வயதான பாசில் மங்கல்பேட் என்பதை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாகவும் போலீஸார் விசாரி்த்து வருகிறார்கள்.

எங்கிட்ட எதுவும் பேசாதிங்க'!சோனியா காந்தி, ஸ்மிருதி இரானி நேருக்கு நேர் வாக்குவாதம்

பெல்லாரி போலீஸார் தரப்பில் கூறுகையில், “ இந்த 3 கொலைகளும்,  பழிவாங்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்டவை. மசூத் கொலைதான், பிரவீன் கொலையைத் தூண்டியது. மசூத் கொலையில் சிறையில் இருப்பவர்களுக்கு பிரவீன் உதவியுள்ளார். இதானால் ஆத்திரமடைந்த சிலர் பிரவீனைக் கொலை செய்துள்ளனர். ஆதலால், இது பழிவாங்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடை இந்த மாதத் தொடக்கத்தில் பஜ்ரங் அமைப்பின் நிர்வாகி ஒருவரும் கொல்லப்பட்டார்.


பிரவீன் கொலை குறித்து அறிந்ததும் முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ஓர் ஆண்டு பதவி ஏற்பு கொண்டாட்டத்தை ரத்து செய்தார். பிரவீன் குடும்பத்தாரை நேரில் சந்தித்த முதல்வர் பொம்மை, அவர்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சத்தை வழங்கினார். இது தவிர பாஜக தனியாக ரூ.25 லட்சம் வழங்கியது.

பிரவீன் குடும்பம் இருக்கும் கிராமத்திலிருந்து 5கி.மீ தொலைவில்தான் மசூத் குடும்பமும் உள்ளது. ஆனால், முதல் பொம்மை மசூத் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை. மசூத் குடும்பத்தினருக்கு எந்தவிதமான நிவாரணமும் இதுவரை  வழங்கவில்லை.

ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் எம்.பி. ‘டங்க் ஸ்லிப்’ பேச்சு: வரிந்து கட்டும் பாஜக

காங்கிரஸ் எம்எல்ஏ யுடி காதர் கூறுகையில் “ ஆளும் பாஜக அரசு மீது எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. ஒரு அரசு நியாயமாகவும்,பாரபட்சமின்றியும் நடக்க வேண்டும். குற்றவாளிகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். மங்களூரு மண்டலத்தில்அமைதி வர வேண்டும். 

பாசில் கொல்லப்பட்டபோது, முதல்வர் பொம்மை மங்களூரு சென்றார். அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால்தான் மக்கள் சட்டத்தை கையில் எடுத்தார்கள். மசூத் வீ்ட்டுக்கு இதுவரை பொம்மை செல்லவில்லை” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே தட்சின கன்னடா பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் மக்கள் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும், எந்தவிதமான அமைதிக்குறைவான சம்பவமும் நடப்பதை தவிர்க்க வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் யாரும் நமாஸ் செய்ய வர வேண்டாம் மற்ற பகுதிகளில் வரத் தடையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில் மதமோதல், அமைதியற்ற சூழல், ஹிஜாப் விவகாரம், இந்து முஸ்லிம் பிரச்சினை என தொடர்ந்து சர்ச்சைகளும், அமைதியற்ற சூழலும் நிலவுகிறது.

ரூ.28 கோடி பணம், தங்க நகைகள்: பர்தா சாட்டர்ஜிக்கு வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு பறிமுதல்

கடந்த தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம்ஆகிய 3 கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், ஜேடியு கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்வராக இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட சிக்கலால்  ஓர் ஆண்டில்ஆட்சி கவிழந்தது.

இதையடுத்து பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். ஆனால், அவரும் அடுத்த ஓர் ஆண்டில் விலக, புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியில் உள்ளார்.

நிலையற்ற அரசு, அமைதியற்ற சூழல், மத மோதல்கள், போன்ற அதிருப்திகளுடன் பாஜகஅடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. கடந்த தேர்தலில் கிடைத்த அளவு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்குமா, அல்லது மீண்டும் பாஜக ஆட்சி அமையுமா என்பது உறுதியாகத் தெரிவிக்க இயலாது. 

click me!