
பி.என்.பி வங்கியில் மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.என்.பி வங்கி தரவுகளின் படி, உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லை மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனை நடக்கவில்லை என்றால், பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வங்கி தரப்பில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பட்டுள்ள குறுஞ்செய்தியில், அன்புள்ள வாடிக்கையாளரே, 01.05.2023 முதல் போதுமான இருப்பு இல்லாத மற்றும் தோல்வியுற்ற உள்நாட்டு ஏடிஎம்களில் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 + ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகத்தை ‘இந்திய ரூபாய்’ மதிப்பிலேயே இனி செய்யலாம்.! மத்திய அரசு தகவல்
டெபிட் கார்டு கட்டணங்களில் திருத்தம்:
பி.என்.பி வங்கி அறிவித்தபடி, வங்கி டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு வழங்குவதற்கான கட்டணங்கள் மற்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளது. இது தவிர, டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பிஓஎஸ் மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். அதாவது, Amazon, Flipkart போன்ற இ-காமர்ஸ் இணையதளத்தில் பொருட்களை வாங்கி பிஓஎஸ் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், சில காரணங்களால் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லை மற்றும் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், வங்கி அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: From The India Gate: தெலுங்கானா தாமரை ஊறுகாயும் மம்தாவில் வாஷிங்மிஷின் காமெடியும்
பி.என்.பி வங்கியில் தோல்வியுற்ற ATM பரிவர்த்தனைகளுக்கான வழிகாட்டுதல்கள்: