டிச.15 முதல் சர்வதேச விமான சேவை… முடிவை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Nov 27, 2021, 8:37 PM IST
Highlights

புதிய வகை கொரனோ பரவி வருவதை அடுத்து டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

புதிய வகை கொரனோ பரவி வருவதை அடுத்து டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனோ பாதிப்பின் நிலவரம் மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பீகே மிஸ்ரா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரதிற்கான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் நாட்டில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் புள்ளி விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். மேலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வகை கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில்  இந்தியாவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்தனர். ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றால் எத்தகைய பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் எனவும் இதனுடைய பரவல் விகிதம்? இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலமை ஆகியவற்றையும் பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர் மொடி, இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதில் அதிகம் கவனம் தேவை என்றும் குறிப்பாக புதிய வகை கொரனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டு கொண்டார். மேலும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச பயண கட்டுப்பாடுகளை இப்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. முன்னதாக வணிக ரீதியான சர்வதேச பயணிகள் விமானச் சேவை டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும்  3 வகையாக வெளிநாடுகள் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப பயணிகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவி வருவதால் தென்னாப்பிரிக்கா, புதிய வைரஸ் பாதிப்புள்ள போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதுமட்டுமின்றி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் புதிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவினால் அந்த நேரத்தில் அதற்கேற்ப முடிவு மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் புதிய வகை கொரனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க வேண்டும் எனவும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

click me!