
மூன்று நாடுகள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி போர்ச்சுகலுக்கு அடுத்தபடியாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். வாசிங்டன் விமானநிலையத்திற்குச் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயண திட்டத்தின் ஒருபகுதியாக முன்னணி நிறுவன செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் மோடி பங்கேற்றனர். இதில் கூகுள் நிறுவன செயல் தலைவர் சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விர்ஜினியாவில் வெளிநாட்டு இந்தியர்கள் வாழ் மத்தியி்ல் மோடி உரையாற்றினார்.
ஆரம்பம் முதல் அடித்து நொறுக்கிய மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.'வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்குஉதவுவதில் சுஷ்மா ஸ்வராஜ் விரைந்துசெயல்படுகிறார். 'சமூக வலைதளங்கள் ஒருதுறைக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்றுவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்காண்பித்துள்ளார். வெளிநாட்டில் வாழும்இந்தியாவைச் சேர்ந்த யாருக்கு ஏதேனும் பிரச்னைஎன்றாலும் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட் செய்தால்,அவர் உடனடியாக பதிலளிக்கிறார். அந்தப் பிரச்னைமீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கிறது' என்றுகூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்திக்கும் பிரதமர் மோடி அடுத்தகட்டமாக நெதர்லாந்து நாட்டுக்குச் செல்கிறார்.