கொரோனா 2ம் அலை: மே 21ல் மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By karthikeyan VFirst Published May 20, 2021, 9:45 PM IST
Highlights

வாரணாசியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுடன் நாளை(மே 21) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு குறைந்துவரும் அதேவேளையில், தினமும் கொரோனாவிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது நம்பிக்கையளிக்கிறது.

கொரோனாவிலிருந்து தப்ப தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரைவுபடுத்தப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தின் முன்னெடுப்பால் வாரணாசியில் உருவாக்கப்பட்ட பண்டிட் ராஜன் மிஷ்ரா கொரோனா மருத்துவமனை உட்பட பல்வேறு கொரோனா மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார். 

கொரோனா 2ம் அலையை வாரணாசியில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் கேட்டறிவதுடன், அதுதொடர்பான ஆலோசனையையும் நடத்துகிறார்.
 

click me!