கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போடலாம்? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published May 20, 2021, 2:26 PM IST
Highlights

கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பான தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர் குழு பரிந்துரையை மத்திய சுகாதார துறை அமைச்சகமானது  ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதனை தொடர்ந்து  மத்திய சுகாதார துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் நோய் தொற்றில் இருந்து  பூரண குணமடைந்து  3 மாதங்களுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  அதேபோல், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடலாம். 

மேலும், பாலுாட்டும் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடுவது பற்றி, தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழு, ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது தொடர்பான பரிந்துரைகளை அக்குழு அளிக்கும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 14 நாட்களுக்கு பின் ரத்த தானம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!