கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசின் செயல்பாடு..! சர்வதேச ஊடகங்களுக்கு அகிலேஷ் மிஷ்ராவின் பதிலடி

By Asianet TamilFirst Published May 19, 2021, 5:36 PM IST
Highlights

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், கொரோனா நெருக்கடியை இந்திய அரசு எதிர்கொண்ட விதம் குறித்து ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை சி.இ.ஓ அகிலேஷ் மிஷ்ரா எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கத்தை பார்ப்போம்.
 

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், கொரோனா நெருக்கடியை இந்திய அரசு எதிர்கொண்ட விதம் குறித்து ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை சி.இ.ஓ அகிலேஷ் மிஷ்ரா எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கத்தை பார்ப்போம்.

கொரோனா பெருந்தொற்றால் சில துயரமான வாரங்களை கடந்த இந்தியாவிற்கு, கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசியாக ஒரு ஒளிவட்டம் தெரிகிறது. 

முதல் வரைபடம், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பை விளக்குவது.

2வது வரைபடம், சராசரி கொரோனா பாதிப்பு குறைந்துவருவதை தெளிவுபடுத்துகிறது.

3 வது வரைபடம், தினசரி கொரோனா பாதிப்பை விட, கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

சர்வதேச ஊடகங்கள் எழுப்பும் முக்கியமான கேள்வி, கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா என்ன செய்தது? என்பது. அதற்கான பதிலை 11 தெளிவான விளக்கங்களுடன் பார்க்கலாம்.

1. தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி மற்றும் மற்ற அறிவியல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான அமைப்பு 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு அமைக்கப்பட்ட அடுத்த 9 மாதங்களில்(ஜனவரி 16, 2021) தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி 2021 மே-ஜூன் காலக்கட்டத்தில் இரு மடங்காக உயர்ந்தது. ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6-7 மடங்காக உயரும். கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மில்லியன் டோஸாக இருந்த கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 60-70 மில்லியன் டோஸ்களாக இருக்கும் என்றும், செப்டம்பர் மாதத்தில் 100 மில்லியன் டோஸ்களை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்ட், ஸ்புட்னிக் போன்ற பிற அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் ஜைடஸ் காடிலா, பயோஇ, நோவோவாக்ஸ் மற்றும் இன்னும் சில மருந்துகளுடன் இணைந்து, மத்திய அரசுக்கு ஆண்டு இறுதிக்குள் 2.16 பில்லியன் டோஸ் கிடைக்கும்.

மே ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 185 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

2. ஆக்ஸிஜன் இருப்பு

ஆக்ஸிஜன் இந்தியாவிற்கான கடும் சவாலாக இருந்துள்ளது. கொரோனா 2ம் அலை பரவ தொடங்குவதற்கு முன்பாக, இந்தியாவில் மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தேவை ஒருநாளைக்கு 900 மெட்ரிக் டன் தான். 

ஆனால் கொரோனா 2ம் அலை அதிதீவிரமடைந்த பின், ஒருநாளைக்கான ஆக்ஸிஜன் தேவை 9000 மெட்ரிக் டன்னாக(10 மடங்கு) உயர்ந்தது. ஆனாலும் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜனை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, பெட்ரோலிய துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல துறைகள் தீவிரமாக செயல்பட்டுள்ளன. 

இப்போதைக்கு 650 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 டேங்கர்கள் மற்றும் 20 ஐ.எஸ்.ஓ கண்டெய்னர்கள் உள்ளன. இந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை, 2314 மெட்ரிக் டன் கொள்ளளவை கொண்ட 26 டேங்கர்கள் மற்றும் 117 ஐ.எஸ்.ஓ கண்டெய்னர்களாக உயரும். 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 4,35,000ஆக இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டு மே மாத நிலவரப்படி 1.12 மில்லியன் சிலிண்டர்களாக அதிகரித்துள்ளது.

3. மருந்துகள், பிபிஇ, என் - 95 மாஸ்க், வெண்டிலேட்டர்கள்

ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி 3.7 மில்லியனாக இருந்த ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி, மே 4ம் தேதி நிலவரப்படி 10.1 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அதே தேதி நிலவரங்களில், ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி ஆலைகள் 20லிருந்து 57ஆக உயர்த்தப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ கண்டுபிடித்த கொரோனாவுக்கான மருந்தை, மருந்து கட்டுப்பாட்டகம் அங்கீகரித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக அந்த மருந்து சிறப்பாக செயல்படுவதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

16.19 மில்லியன் பிபிஇ கிட், 41 மில்லியன் என் - 95 மாஸ்க்குகள், நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 38,103 புதிய வெண்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

4. பரிசோதனைக்கான கட்டமைப்பு

தினமும் 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யுமளவிற்கு பரிசோதிக்கும் திறன் உள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் உள்நாட்டு கிட் இல்லாமல் இருந்த நிலையில், தற்போதும் தினமும் 10 லட்சம் பரிசோதனை கிட் உற்பத்தி செய்யுமளவிற்கு திறன் உள்ளது.

5. மருத்துவமனைகள்

மொத்தம் 1.86 மில்லியன் படுக்கைகல் உள்ளன. இவற்றில் 4,68,974 படுக்கைகள் கொரோனாவுக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் உள்ளன. கடந்த ஆண்டு லாக்டவுனுக்கு முன்பாக இந்த எண்ணிக்கை வெறும் 10,180ஆக இருந்தது.

ஐசியு படுக்கைகள் 2,168லிருந்து இப்போது 92,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 4,400 கொரோனா கேர் ரயில் கோச்களில் 70,000 தனிமை படுக்கைகள் உள்ளன. 

6. இந்திய மக்களுக்கு அரசு செய்த உதவிகள்

முதல் முறையாக பஞ்சாப் விவசாயிகள், தங்களது கோதுமைக்கான கொள்முதல் விலையை தங்கள் வங்கி கணக்குகளில் நேரடியாக பெற்றனர். பஞ்சாப் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 3 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களை சேர்ந்த 20 மில்லியன் பயனாளர்களுக்கு ஒரு லட்சம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

7. உலக நாடுகளிடமிருந்து பெற்ற உதவிகளை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தல்

மே 11ம் தேதி நிலவரப்படி, உலக நாடுகளிடமிருந்து பெறப்பட்ட 8900 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 5043 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 18 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 5698 வெண்டிலேட்டர்கள், 3,40,000க்கும் அதிகமான ரெம்டெசிவர் மருந்துகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

8. மாநில அரசுகளுக்கு செய்யப்பட்ட நிதி உதவிகள்

25 மாநிலங்களில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து மொத்தமாக 1.5  பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அவசரகாலத்தை கருத்தில்கொண்டு மாநிலங்களுக்கான காலாண்டு ஓவர்டிராஃப்ட் 36 நாட்களிலிருந்து 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

மாநிலங்களின் மூலதன திட்டங்களுக்காக, வட்டியில்லாத 50 ஆண்டுகால நீண்டகால கடனாக 2 பில்லியன் டாலர்களை வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

9. மருத்துவ அவசரகால சேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நிதி சார்ந்த நடவடிக்கைகள்

கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக, அவசரகால சுகாதார சேவைகளுக்கான அணுகலை எளிதாக்குவதற்காக, ரெப்போ விகிதத்தில், 3 ஆண்டுகள் வரை பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்ட கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலர்களின் கால பணப்புழக்க வசதி.

சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் உதவி செய்யப்பட்டது. குறைவான வட்டி விகிதத்தில் வங்கிக்கடன் அளிக்கப்பட்டது. 

10. பிஎம் கேர்ஸ் நிதி வழங்கல்

பிஎம் கேர்ஸ் நிதிக்கு கிடைத்த நிதியை வைத்து 1,200 மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஆலை அர்ப்பணிக்கப்பட்டது. பிஎம் கேர்ஸ் நிதியை வைத்து 1,50,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டன. 

50,000 “Made in India" வெண்டிலேட்டர்கள் உற்பத்திக்கும் கொள்முதலுக்கும் பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்பட்டது. 

150 மில்லியன் டாலர் தொகை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிக்கு பயன்படுத்தப்பட்டது. 

மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடுவதற்காக 66 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிக்கு பிஎம் கேர்ஸ் நிதி தான் பயன்படுத்தப்பட்டது.

11.  முன்னின்று வழிநடத்திய பிரதமர் - ஆய்வுக்கூட்டங்கள்

கொரோனா நெருக்கடி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னின்று வழிநடத்தினார். கொரோனா காலத்தில் இதுவரை 10 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. 

கொரோனா முதல் அலை, 2ம் அலைக்கு முன், 2ம் அலையின்போது என பல்வேறு கட்டங்களிலும் மாநில முதல்வர்கள், உயர்மட்ட அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார் பிரதமர் மோடி.

ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள், மருந்து உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள், ஆயுதப்படையினர் என பலதரப்பினருடனும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

இந்தியா வலி மிகுந்த, நெருக்கடியான சூழலில் கொரோனாவுக்கு எதிராக போரிட்டுவருகிறது. மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோர் இந்த போரில் நாயர்களாக முன்னின்று போராடிவருகின்றனர். கொரோனாவிலிருந்து மீள அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

எழுத்தாக்கம் - அகிலேஷ் மிஷ்ரா, சி.இ.ஓ, ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை.

click me!