“விவசாயிகளின் நண்பன்.. நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி” - என்ன செய்தார் தெரியுமா ?

By Raghupati RFirst Published Sep 16, 2022, 2:55 PM IST
Highlights

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

பிரதமர் மோடியின் அரசாங்கம் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களின் வடிவத்தில் அமைச்சகத்தால் பல புதுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து விவசாய உதவிகள் ஆனது முழு வெளிப்படைத் தன்மையுடன் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக அவர்களைச் சென்றடைகின்றன. 

விவசாயிகளின் வருமானம் அதிகரித்து, விவசாயத்தை தொழிலாக ஏற்றுக்கொள்ளும் அவர்களின் சிந்தனை புதிய திசையைப் பெற்றுள்ளது. அதேபோல, கடந்த 8 ஆண்டுகளில் பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, விவசாயிகளுக்கு உகந்த விவசாயக் கொள்கைகள் ஆகியவை அரசாங்கத்தின் நேர்மறையான சிந்தனை மற்றும் வலுவான மன உறுதியின் ஒரு பகுதியாக இருக்கிறது.

இது இந்திய விவசாயிகளின் வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்கிறது. நடப்பு நிதியாண்டில்  பட்ஜெட்டில்  விவசாயத்துக்கு சுமார் ரூ.1.32 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா பல நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கியது.  இது சாதாரண சாதனை அல்ல, மாபெரும் சாதனை. 

ரஷ்யா - உக்ரைன் நெருக்கடியின் போதும் மற்றும் தேவைப்படும் நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது விவசாய ஏற்றுமதி.  பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 11.50 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.82 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..PM Modi 72nd Birthday: பிரதமர் மோடியின் பாபுலர் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் வெற்றிப் பாதைகள் ஒரு பார்வை!!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் இத்துடன் நின்றுவிடவில்லை. இளங்கலை மற்றும் முதுகலை கற்பித்தல் படிப்புகளில் இயற்கை விவசாயம் தொடர்பான பொருட்களை சேர்க்க இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) ஒரு குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இரசாயனமில்லாத இயற்கை விவசாயத்திற்கு அமைச்சகம் மற்றும் ICAR ஆதரவு அளித்து வருகிறது.

விவசாயிகளின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே விவசாயிகளுக்கான மத்திய அரசின் அர்ப்பணிப்பாகும். விவசாய உள்கட்டமைப்பு நிதி போன்ற முக்கியமான மற்றும் விரிவான திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சேவையாற்றுகிறது. ஆத்மநிர்பர் பாரத் பிரச்சாரத்தின் கீழ் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்திற்கு அரசு சிறப்பு ஊக்குவிப்பு அளித்து வருகிறது. 

இதேபோல், தேசிய வேளாண் சந்தை (இ-நாம்), பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா மற்றும் விவசாய இயந்திரமயமாக்கல் போன்ற திட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், இயற்கை பேரிடர்களின் போது விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.மேலும் விவசாயிகளை இணைக்க, ‘Meri Policy, Mere Haath’ பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. 

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவங்களில் ஒன்று சுமார் ரூ. 21,000 கோடி ரூபாயை பிரீமியமாக விவசாயிகள் செலுத்தியுள்ளனர்.அதே நேரத்தில் பயிர் இழப்புகளுக்கு எதிராக ரூ. 1.15 லட்சம் கோடி ரூபாய். கிளைம் பெற்றுள்ளனர். கிசான் ரயில் திட்டம் என்பது விவசாய விளைபொருட்களை சீராக கொண்டு செல்வதற்கான மிக முக்கியமான திட்டமாகும். அழுகும் பொருட்களை விரைவாக சந்தைக்கு எடுத்து செல்ல சிறப்பு ரயிலை இயக்குவது. விவசாயிகள் மீதான அரசின் மற்றொரு அர்ப்பணிப்பு ஆகும்.

இதுவரை, நாடு முழுவதும் 175 வழித்தடங்களில் சுமார் 2,500 பயணங்களை இத்தகைய சிறப்பு ரயில்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. உழவர் நட்பு திட்டங்களின் மூலம், இந்திய அரசு எதிர்காலத்தில் நமது விவசாயத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். விவசாயத்துறையில் பல எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் உள்ளன. நமது திறமையான பிரதமரின் தலைமையின் கீழ் அரசாங்கம் இதை நன்கு புரிந்து கொண்டு அந்த திசையில் முழு பலத்துடன் முன்னேறி வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, பொன்னான விவசாயத் துறையின் மகத்தான பார்வையை திரும்பிப் பார்க்க முடியும். மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விவசாயிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்கிறது என்பது இத்தகைய திட்டங்களின் மூலம் நிரூபணமாகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக..! மோடி பிறந்தநாளில் 720 கிலோ மீன், தங்க மோதிரம்..! எல்.முருகன் அதிரடி

click me!