உலகின் 2-வது கோடீஸ்வரராக இந்தியாவின் தொழிலதிபர் கெளதம் அதானி முன்னேறியுள்ளார் என்று ஃபோர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
உலகின் 2-வது கோடீஸ்வரராக இந்தியாவின் தொழிலதிபர் கெளதம் அதானி முன்னேறியுள்ளார் என்று ஃபோர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்டு அர்நால்டை பின்னுக்குத் தள்ளி கெளதம் அதானி இந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார்.
பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்?
60வயதான அதானி தற்போது, அமேசான் அதிபர் ஜெப் பிஜோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பெர்க்சையர் ஹாத்வே தலைவர் வாரன் பபெட் ஆகியரை கடந்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் இந்தியா கவனம்: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ஃபோர்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடந்துவிட்டது. ஏறக்குறைய 3.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதலிடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். மஸ்கின் சொத்து மதிப்பு 273.5 பில்லியன் டாலராகும். ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்ட மஸ்கின் சொத்து மதிப்பு திடீரென குறைந்தது, ஆனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தவுடன் மஸ்கின் சொத்து மதிப்பு 78.90 கோடி டாலர் அதிகரித்தது.
டாப்-10 கோடீஸ்வரர்களில் அதானி, மஸ்க் இருவர் மட்டுமே நிகர சொத்து மதிப்பு உயர்வைப் பெற்றவர்கள்.
டாப்-10 கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும் உள்ளார். இவரின் சொத்து மட்டு 9200 கோடி டாலராகும். இது தவிர கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோர் உள்ளனர். ஆனால், அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 280 கோடி டாலர் குறைந்ததுதான் அவர் பின்னடைய காரணமாகும்.
அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் கடந்த புதன்கிழமை மட்டும் எலான் மஸ்க், ஜெப் பிஜோஸ் இருவருக்கும் ரூ.1.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.