தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்... பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!!

By Narendran SFirst Published Jul 20, 2022, 5:59 PM IST
Highlights

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியதை அடுத்து  பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியதை அடுத்து  பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை எதிர்க்கும் ஒரே பேராயுதமாக விளங்கும் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போது கொரோனா பலி அதிகமாக இருந்த நிலையில், தடுப்பூசியின் காரணமாக அடுத்த இரண்டு அலைகளில் பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை... என்னானு தெரியுமா?

இதனிடையே தற்போது நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்படி மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோசும், 90 சதவீதம் பேர் முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மனஅழுத்தமின்றி விளையாடுங்கள்: காமென்வெல்த் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

இதன்படி மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோசும், 90 சதவீதம் பேர் முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில், 200 கோடி டோஸ் தடுப்பூசி சாதனையை அடைந்ததற்காக தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களை எழுதி வாழ்த்தியுள்ளார். இதனை தடுப்பூசி செலுத்தியவர்கள் கோவின் தளத்தில் உள்ளீடு செய்து பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

click me!