அதையும் கழற்றச் சொன்னார்கள்... என் கூந்தலால் மறைத்துக் கொண்டேன்... நீட் அட்ராசிட்டி குறித்து மாணவி பகீர்

Published : Jul 20, 2022, 04:43 PM ISTUpdated : Jul 20, 2022, 04:49 PM IST
 அதையும் கழற்றச் சொன்னார்கள்... என் கூந்தலால் மறைத்துக் கொண்டேன்... நீட் அட்ராசிட்டி குறித்து மாணவி பகீர்

சுருக்கம்

நீட் தேர்வு சோதனையின்போது தனது உள்ளாடைகளை  கழட்டச் சொல்லி தேர்வு மைய ஊழியர்கள் கட்டியப்படுத்தியதாகவும் பின்னர் தர்மசங்கடமான நிலையில் தனது மார்பகங்களை கூந்தலால் மறைத்துக் கொண்டு பிராவை கழற்றியதாகவும் மாணவிகள் வேதறை தெரிவித்துள்ளனர். 

நீட் தேர்வு சோதனையின்போது தனது உள்ளாடைகளை  கழட்டச் சொல்லி தேர்வு மைய ஊழியர்கள் கட்டியப்படுத்தியதாகவும் பின்னர் தர்மசங்கடமான நிலையில் தனது மார்பகங்களை கூந்தலால் மறைத்துக் கொண்டு பிராவை கழற்றியதாகவும் மாணவிகள் வேதறை தெரிவித்துள்ளனர். இது கேரள மாநிலத்தில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு 'நீட் '  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் அருகே உள்ள தேர்வு மையத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.  

அப்போது தேர்வு மைய ஊழியர்கள் அங்கு வந்த மாணவிகளை பரிசோதித்தனர். அப்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றுமாறு அவர்கள் வற்புறுத்தியுள்ளனர் இது மாநிலம் முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபமடைந்த பெற்றோர்கள் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர், இந்நிலையில் இது குறித்து கொல்லம் ஊரக எஸ்பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுக்கு புகாரை எடுத்துச் செல்லும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ருரல் எஸ்பியிடம் புகார் அளித்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அவமானத்தை விளக்கியுள்ளனர். மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்வதற்கு முன்னர் அவர்களின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வு மையத்தில் இடம்பெற்ற இருந்து 90 மாணவிகளும் அவமானகரமான சூழ்நிலை அனுபவித்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றுள்ளனர் என ஆதங்கம் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து இந்நிலையில் கொல்லம் ஊரக போலீசார் மாணவிகளிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்: பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணி.. மாத சம்பளம் 2 லட்சம்.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..

மேலும் தேர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இதுபோன்ற மோசமான சோதனைகள் குறித்து எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்றும், எனது மகள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார், எனது மூத்த மகள் மருத்துவ மாணவி அவர் தேர்வு  எழுதும்போதுகூட இதுபோன்று கெடுபிடிகள் இல்லை, ஆனால் இப்போது மோசமான நெருக்கடிகள் வந்துள்ளன என மாணவியின் பெற்றோர்  ஒருவர் அதிர்ச்சி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: நைட்டு வந்தாலே குடித்து விட்டு ஓயாமல் டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!

மாணவர்களை பரிசோதித்த ஊழியர்கள்  உள்ளாடைகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார் ஏனெனில் மெட்டல் டிடெக்டர் அதாவது உள்ளாடையில் உலோகம் இருப்பது கண்டறியப்பட்டதால் கழற்ற கூறியிருக்கிறார்கள். ஆனால்  ஒரு மாணவி கழற்ற மறுத்ததால் அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க படமாட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர், அதனால் அந்த மாணவி தனி அறைக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ளாடைகளை கழட்டி சோதனை செய்யப்பட்டுள்ளார். இது ஒரு விதமான உளவியல் ரீதியான துன்புறுத்தல்  என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சோதனை குறித்து விளக்கியுள்ள ஒரு மாணவி, எங்களை எல்லாம் ஸ்கேன் செய்து உடனே அனுப்பி விடுவார்கள் என்று எண்ணினோம், ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் இரண்டு வரிசையில் நிறுத்தினார்கள், ஒன்று உலோக கொக்கிகள் உள்ள வரிசை, மற்றொன்று உலக கொக்கிகள் இல்லாத பிரா அணிந்திருக்கும் பெண்களுக்கான வரிசை, அதில் என்னிடம் எந்த வகையான பிரா அணிந்திருக்கிறாய் என கேட்டனர், அப்போது அதை சொல்ல எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பிறகு நான் அணிந்திருந்த உடைக்கு ஏற்ற வரிசையில் போய் நின்றேன், ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை நான் எதிர்பார்க்கவில்லை,

தனி அறைக்கு அழைத்துச் சென்று எங்கள் பிராவை கழட்டச் சொன்னார்கள். மேசையின் மீது வைக்கச் சொன்னார்கள், பின்னர் எல்லா பிராக்களையும் தொட்டுப் பார்த்தனர், பிறகு திரும்பி வந்து பார்க்கும்போது  எல்லா பிராக்களும் குப்பைகள் போல குவிக்கப்பட்டிருந்தன. எங்கள் பிராக்களை தேடி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவர்கள் எங்களை அப்படி நடத்தியது மரண வேதனையாக இருந்தது. இதுதவிர சில பெண்கள் அவமானத்தால் கதறி அழுதனர், அப்போது ஒரு பெண் போலீஸ் ஏன்  அழுகிறாய் என மிக அலட்சியமாக கேட்டார்.

நாங்கள் திரும்பி வரும் போது பிரா அணிய விரும்பினோம், ஆனால் உடை மாற்றுவதற்கு இடம் இல்லை,  இது மோசமான அனுபவம், பிரா கழற்றும்போது சால்வை, துப்பட்டா என எதுவும்இல்லாததால் எங்கள் கூந்தல்களால் எங்களது மார்பகங்களை மறைத்துக் கொண்டோம். இவ்வாறு அந்த மாணவி தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். தேர்வு மையத்தில் நடந்த இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!