PM Modi New House: புதிய வீட்டுக்குக் குடியேறும் பிரதமர் மோடி! சுரங்கப்பாதையுடன் நவீன பாதுகாப்பு வசதிகள்!

Published : Feb 05, 2023, 11:30 AM ISTUpdated : Feb 05, 2023, 12:41 PM IST
PM Modi New House: புதிய வீட்டுக்குக் குடியேறும் பிரதமர் மோடி! சுரங்கப்பாதையுடன் நவீன பாதுகாப்பு வசதிகள்!

சுருக்கம்

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இறுதியில் குடியேற உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் இல்லங்கள், குடியரசுத் தலைவரின் மாளிகை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியா கேட் வரை உள்ள கடமைப்பாதையை மத்திய அரசு புதுப்பித்துக் கட்டிவருகிறது.

மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் புதிய பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், துணை குடியரசுத் தலைவர் இல்லம் ஆகியவை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பின்புறத்தில் உருவாகி வருகின்றன.

அதானி என்டர்பிரைசர்ஸ் FPO ரத்து இந்தியாவின் மரியாதையை பாதிக்காது: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

தற்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லியின் லோக் கல்யாண் சாலையில் உள்ள இல்லத்தில் வசித்துவருகிறார். இப்போது புதிய பிரதமர் இல்லம் தயாராகிவிட்டதால் அவர் இந்த ஆண்டுக்குள் அங்கு குடியேற உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி, பிரதமர் மோடி புதிய வீட்டுக்குக் குடியேறுவார் என்று தெரிகிறது.

பல அதிநவீன வசதிகளுடன் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களும் கொண்டதாக பிரதமர் இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி. அமைப்பு இந்த வீட்டைக் கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவற்றின் அடிப்படையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் புதிய வீட்டுக்காக ரூ.467 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 36,328 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரதமரின் வீட்டில் அவரது உதவியாளர்கள் தங்குமிடம், எஸ்.பி.ஜி. பாதுகாவலர்கள் தங்குமிடம், உள்விளையாட்டு அரங்கம் ஆகியவையும் இருக்கும். குறிப்பாக பிரதமர் தனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல பிரத்யேகமான சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! பேரு நல்லா இருக்கு சாப்பாடு? பயணி வெளியிட்ட வீடியோ வைரலால் ரயில்வே அதிர்ச்சி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!