From the IAF Vault: இந்திய விமானப்படையின் முதல் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

By SG BalanFirst Published Feb 4, 2023, 11:25 PM IST
Highlights

சுதந்திர இந்தியாவின் முதல் விமானப்படை தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார் தெரியுமா? அதன் பின்னணியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களைக் காண்போம்.

1947ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது அப்போதைய பிரிட்டிஷ் அரசு இரு நாட்டு ராணுவத்துக்கும் புதிய தலைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தது. அப்போது வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் 1947 ஜூலை 1ஆம் தேத இந்தப் பொறுப்பை அப்போதைய பிரிட்டிஷ் ராணுவ விமானப்படை தலைமை கமாண்டராக இருந்த வெல்லஸ்ஸி வசம் ஒப்படைத்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தகுதி வாய்ந்த விமானப்படை தலைவர்களைத் பரிந்துரை செய்ய வேண்டியது வெல்லஸ்லியின் பொறுப்பாக இருந்தது. அந்தப் பரிந்துரையின் மீது இறுதி முடிவை எடுக்கவேண்டியவர்களாக இருந்தவர்கள் இந்தியப் பிரதமர் நேரும் பாகிஸ்தான் பிரதமர் ஜின்னாவும்.

இந்த நிலையில் ஜெனரல் ஆச்சின்லெக் வைஸ்ராய் மவுண்ட்பேட்டனுக்கு ஒரு கடிதம் எழுதிய தாமஸ் எல்ம்ஹிர்ஸ்ட்டை பாகிஸ்தான் விமானப்படை தலைவர் பதவிக்குப் பரிந்துரை செய்தார்.

மவுண்ட்பேட்டன் அவர் சொன்னபடியே எல்ம்ஹிர்ஸ்டின் பெயரை வெல்லஸ்லியிடம் தெரிவித்தார். ஆனால், இந்தியாவுக்கு இவரை பணி அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இதற்கான பேச்சுவார்த்தையை வெல்லஸ்லி ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவரை தங்கள் புதிய ராணுவத்தின் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டன என்று ஜூலை 10ஆம் தேதி மவுண்ட்பேட்டன் வெல்லஸ்லிக்கு செய்தி அனுப்பினார். அப்போது விமானப்படையில் செல்வாக்கு மிக்கவராக இருந்த இந்தியரான மார்ஷெல் முகர்ஜிக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அவர் தான் அந்தப் தலைமைப் பதவிக்கு இயல்மாகத் தேர்வு செய்யப்படுவோம் என்று எண்ணி இருந்தார்.

உலக அளவில் நம்பர் 1 நம்ம பிரதமர் மோடி தான்!.. ரிஷி சுனக், ஜோ பைடன் எந்த இடம்.? ரிப்போர்ட் என்ன சொல்லுது.?

மவுண்ட்பேட்டனிடமிருந்து வந்த செய்தி வெல்லஸ்லிக்கும்கூட ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அப்போது பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் புதிதாக ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. துணை ஏர் மார்ஷெலாக இருந்த பெர்ரி கீன் மட்டும்தான் சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் 1935 முதல் இந்தியாவில் பல பகுதிகளில் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.

வெல்லஸ்லி கேட்டுக்கொண்டபடி, ஜூலை 18ஆம் தேதி மவுண்ட்பேட்டன் அதிருப்தியில் முகர்ஜியைச் சந்தித்தார். ஆனால் அவர் நாட்டின் நலனுக்காக சமரசம் செய்துகொள்ள தயாராக இருந்தார். இரண்டு மூன்று ஆண்டுகளில் தலைமைப் பொறுப்புக்கு அவரே வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பினார். இவ்வாறு வெல்லஸ்லி, மவுண்ட்பேட்டன், முகர்ஜி மூவரும் ஒருமித்த கருத்தை அடைந்ததும், ஜூலை 22ஆம் தேதி பெர்ரி கீன் இந்திய விமானப்படை தலைவராக நியமிக்கப்பட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு திருப்பம் வந்தது.

ஜூலை 21ஆம் தேதி நேரு மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய கடிதத்தில் எல்ம்ஹிர்ஸ்டை இந்திய விமானப்படை தலைவராக நியமிக்கலாம் என்று கோரியிருந்தார். ஜெனரல் ஆச்சின்லெக் நேருவுக்கும் அணுக்கமானவராக இருந்தார். எல்ம்ஹிர்ஸ்டை இந்திய விமானப்படைத் தலைமைக்கு தேர்வு செய்ய நேருவுக்கு பரிந்துரை செய்ததும் அவராக இருக்கலாம்.

நேருவின் கடிதத்தை ஏற்று மவுண்ட்பேட்டன் ஜூலை 26ஆம் தேதி நேருவும் எல்ம்ஹிர்ஸ்டும் சந்திக்க வழிவகுத்தார். அந்தச் சந்திப்பில் நேரு இந்திய விமானப்படையின் தலைவராகப் பொறுப்பேற்க எல்ம்ஹிர்ஸ்டின் ஒப்புதலைப் பெற்றுவிட்டார். பின்னர், இதேபோன்ற சந்திப்பை ஜின்னா மற்றும் பெர்ரீ கீன் இடையே ஏற்பாடு செய்தார் மவுண்ட்பேட்டன்.

முடிவில், 1947ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்திய விமானப்படையின் முதல் தலைவராக தாம்ஸ் எல்ம்ஹிர்ஸ்டும் பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தலைவராக பெர்ரீ கீனும் அறிவிக்கப்பட்டனர்.

புதிய வருமானவரி முறையால் வரிசெலுத்துவோருக்கு பாதிப்பு: ஆர்எஸ்எஸ் ஆதரவு எஸ்ஜேஎம்(SJM) எதிர்ப்பு

click me!