உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கடந்த 2014 தேர்தலில் பாஜகவை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர் பிரதமர் நரேந்திர மோடி. வாத்நகரில் உள்ள குஜராத்தி குடும்பத்தில் பிறந்த இவர், தந்தையின் தேநீர் கடையில் உதவி செய்து பின்னர் சொந்தமாக தேநீர் கடை வைத்து எளிமையாக வாழ்வை துவங்கியவர்.
நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 2019இல் நடந்த தேர்தலிலும் வென்ற அவர் தொடர்ந்த 9 ஆண்டுகளாகப் பிரதமராக இருக்கிறார். இந்தியாவின் முகமாக உலக அளவில் பார்க்கப்படுகிறார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க..மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மார்னிங் கன்சல்ட் நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய ஆய்வில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் இடம்பெற்றுள்ளார்.
22 தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீதத்துடன் முதலிடத்திலும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லாபெஸ் ஒபராடோர் 68 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், சுவிஸ் அதிபர் அலைன் பெர்செட் 62 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்பதில் இந்தியாவில் உள்ள 18 சதவீத மக்கள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தலா 40 சதவீத வாக்குகள் பெற்று முறையே ஏழாவது மற்றும் ஒன்பதாவது இடத்தைப் பெற்றனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 30 சதவீத வாக்கு பெற்று பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தார்.
ரிஷி சுனக் மீது பிரிட்டன் நாட்டில் சுமார் 58% மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று இதில் தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் 29% ஆதரவுடன் 17ஆவது இடத்தில் உள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?