Vande Bharat Express:செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் வந்தே பாரத் ரயில்!பிரதமர் மோடி 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்

By Pothy RajFirst Published Jan 14, 2023, 1:26 PM IST
Highlights

நாட்டின் 8-வது, மற்றும் செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை (15ம்தேதி) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளார்.

நாட்டின் 8-வது, மற்றும் செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை(15ம் தேதி) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மலையப்பனை நினைத்து மலைக்காதிங்க! திருப்பதி கோயில் 2022-ல் பக்தர்களின் உண்டியல் காணிக்கை தெரியுமா?

நாட்டின் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் நகரங்களுக்கு இடையே காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைக்க உள்ளார். தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் 700கி.மீ தொலைவைக் கடக்கும் வகையில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும். இந்த ரயில் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டிணத்துக்கு 8 மணிநேரத்தில் சென்றுவிடும். 

இந்த ரயில் விசாகப்பட்டிணம், ராஜமுந்திரி, விஜயவாடா ஆகிய நகரங்களிலும், தெலங்கானாவில், கம்மம், வாராங்கல், செகந்திராபாத் நகரங்களிலும் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 2.0 ,அதி வேகத்தில் செல்லக்கூடியது. மணிக்கு 160 கி.மீ தொலைவை எளிதாக எட்டிவிடும் திறன்மிக்கது. இதுவரை 7வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

11 நாட்கள் தலைமறைவு! ‘சான்ட்ரோ’ ரவியை குஜராத்தில் கைது செய்தது கர்நாடக போலீஸார்

டெல்லி-வாரணாசி வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி-ஸ்ரீ வைஷணவ் தேவி கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், காந்திநகர்-மும்பை, புதுடெல்லி-அம் அந்துரா, சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடைமுறையில் உள்ளன.

கடந்த 11ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி கண்ணாடிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை

பாஜக தலைவர் நுபர் ஷர்மாவுக்கு துப்பாக்கி லைசன்ஸ் ! பாலியல், கொலை மிரட்டல் எதிரொலி

பாஜக மூத்த தலைவர் கிஷன் ரெட்டி ட்விட்டரில் கூறுகையில் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து விசாகப்பட்டிணத்துக்கு ஜனவரி 15ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளார். சங்கராந்தி புனித நாளில் தெலங்கு பேசும் மக்களுக்கு மத்திய அரசு அளிக்கும்  பரிசாக அமையப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

click me!