கர்நாடகத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு கடந்த 2 மாதங்களில் 4-வது முறையாக இன்று செல்கிறார்.
கர்நாடகத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு கடந்த 2 மாதங்களில் 4-வது முறையாக இன்று செல்கிறார்.
ஷிவமோகா, பெலகாவி மாவட்டங்களுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார், பலகோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
சிவமோகா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து அந்த வமானநிலையத்தைப் பார்வையிடுகிறார். இது தவிர சிவமோகாவில் பலகோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி நிதி உதவி! பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்
சிவமோகா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் ஸ்மார்ர்ட் சிட்டி திட்டங்கள், ரயில்வே தி்ட்டங்கள், சாலைத் திட்டங்கள், கிராமப்புறங்களளில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இது தவிர்த்து விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவித் திட்டத்தின் 13வது தவணையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
சிவமோகாவில் ரூ.450 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையம், மணிக்கு 300 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. சிவமோகாவில் இருந்து மலநாடு பகுதிக்கு போக்குவரத்து தொடர்பை விரிவுபடுத்தும், எளிதாக செல்லும் வகையில் விமானப் போக்குவரத்து அமையும்.
சிவமோகா, சிவமோகா, சிகாரிபுரா, ரானேபென்புரா இடையிலான இரு ரயில்வே திட்டங்களையும், கோடேகன்கரு ரயில் கோச்சிங் டெப்போவுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். புதிய வழித்தடம் ரூ.990 கோடியில் மேம்படுத்தப்பட்டு, மலநாடு பகுதி பெங்களூரு, மும்பை இடையே இணைப்பை மேம்படுத்தும்.
கோச்சிங் டெப்போ ரூ.100 கோடியில் சிவமோகாவில் கட்டப்படஉள்ளது. இதனால் ரயில்கள் பராமரிப்புஎளிதாக இருக்கும்.
பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர் - எதற்கு தெரியுமா.?
இது தவிர ரூ.215 கோடிக்கு பிரதமர் மோடி திட்டங்களை அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக ஷிகாரிபுரா நகரத்துக்கு புறவழிச்சாலை அமைத்து, பைந்தூர்-ரானிபென்னூ இணைக்கும் வகையில் உருவாக்குவது. மேகாரவள்ளி முதல் அகும்பே தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துதல், தீர்த்தஹல்லி தாலுகாவில் புதிய பாலம் கட்டுவதித்தலையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.950 கோடிக்கு கிராமங்களுக்கு குடிநீர்இணைப்பு வழங்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.895 கோடி மதிப்பில் 44 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பெலகாவி நகரில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ரூ.2ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி வழங்கப்படுகிறது. மறுசீரமைக்கப்பட்ட பெலகாவி ரயில்வே நிலையத்தைநாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார் ்