நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
நாகாலாந்து, மேகாலயாவில் நடந்த இரு சாலை விபத்துகளில், தேர்தல் அதிகாரி ஒருவரும், ஓட்டுநரும் உயிரிழந்தனர்.
60 தொகுதிகள் கொண்டநாகாலாந்து சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. 60 தொகுதிகளுக்கு 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. இதில் ஜூன்போட்டோ மாவட்டத்தில் பாஜக வேட்பாளரும் எம்எல்ஏவுமான கஸ்ஹெட்டோ கின்னிமி போட்டியின்றி வெற்றுள்ளார். இதனால் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்நடக்கிறது. மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியும் நாகாலாந்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்தனர். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் பாஜக இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டு இங்கு ஆட்சியில் இருந்தது, அதன்பின் இப்போது எந்த எம்எல்ஏவும் அந்தக் கட்சிக்கு இல்லை. இந்த முறை 23 வேட்பாளர்களை இறக்கியுள்ளது.
நாகாலாந்தில் காலை 9 மணி நிலவரப்படி, 12.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேகாலயா மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 10.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி எப்ஆர் கார்கோன்கர் தெரிவித்தார்
பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர் - எதற்கு தெரியுமா.?
மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளுக்கு 59 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இங்கு மொத்தம் 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியைப்பிடிக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி பிராந்தியக் கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. 3,419 வாக்குப்பதிவு மையங்களில் காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். 369 வேட்பாளர்களில்36 வேட்பாளர்கள் பெண்கள், அதில் 10 பெண் வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயா மற்றும் நாகாலந்தில் நடந்த இரு விபத்துகளி்ல தேர்தல் அதிகாரி ஒருவரும், தேர்தல் அலுவலர்களையும், காவலர்களையும் ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநரும் உயிரிழந்தனர்.
தேர்தல் ஆணையம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ திக்ரிகில்லா தொகுதியில் உள்ள ஜங்க்ரா பாரா வாக்குப்பதிவு மையத்தில், 2வது தேர்தல் அதிகாரியாக சேசன் ஜி மார்க் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்
ஆனால், மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் தேர்தல் அிதகாரி ஜி மார்க் உயிரிழந்தமைக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஜி மார்க் அர்ப்பணிப்பான பணியாளர், ஜனநாயக்தின் மீது நம்பிக்கை கொண்டவர். எங்களின் பிரார்த்தனை அவர்களின் குடும்பத்தினருக்காக இருக்கும். தேர்தல் பணியில் உயிரிழந்த ஜி மார்க் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.15 லட்சம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்
நாகாலாந்தில் வோகோ மாவட்டம், யக்கும் கிராமம் அருகே, வாக்குப்பதிவு எந்திரங்கள், காவலர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுநர் பலியானார், மற்ற 4 காவலர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.