
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது நிர்மல் மாவட்டம்.
இதன் அருகே உள்ளது பார்டி என்ற கிராமம். இக்கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பில் நடனமாடும் போது 19 வயது இளைஞன் சரிந்து விழுந்தான்.
தெலுங்கானாவில் உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது 19 வயது இளைஞன் இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞன் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருந்தான் என்றும், விருந்தினர்களின் முன்னிலையில் பிரபலமான பாடலுக்கு வரிசையாக நடனமாடி கொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
மேலும், அந்த இளைஞன் நடனமாடும்போது, அவர் திடீரென்று சரிந்து மயக்கமடைந்தான். விருந்தினர்கள் அவனை அருகே உள்ள பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்த மருத்துவர்கள் இளைஞரை பரிசோதித்தபோது, இறந்துவிட்டதாக கூறினர்.
கடந்த நான்கு நாட்களில் தெலுங்கானாவில் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, பிப்ரவரி 22 அன்று ஹைதராபாத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பணிபுரிந்தபோது 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்