PM Modi to visit Karnataka & Mumbai today: கர்நாடகா, மும்பைக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

By Pothy RajFirst Published Jan 19, 2023, 10:23 AM IST
Highlights

கர்நாடகா மாநிலத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.10,800 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

கர்நாடகா மாநிலத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.10,800 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

இதில் ரூ.2100 கோடி மதிப்பிலான சூரத்-சென்னை தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் முக்கியமானதாகும்.
கர்நாடக மாநிலத்துக்கு வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக பிரதமர் மோடி இந்த மாதத்தில் 2-வது முறையாக வருகை தருகிறார். ஏற்கெனவே கடந்த 12ம் தேதி இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்க மோடி வந்திருந்தார்.

தேசிய கட்சிகளில் அதிக வருமானம் பெற்ற கட்சி பாஜக.. திமுகவும் லிஸ்ட்ல இருக்கு! எத்தனையாவது இடம் தெரியுமா?

இன்று நண்பகல் 12 மணி அளவில் கர்நாடகாவின் வடக்கு மாவட்டமான யத்கிரி மற்றும் கலாபுர்கிக்கு செல்லும் பிரதமர் மோடி, ரூ.10,800 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள், குடிநீர், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிற்பகல் 2.15 மணிக்கு கலாபுர்கி மாவட்டத்தில் உள்ள மால்கேட் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள மக்களுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்குகிறார், மேலும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

யத்கிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வீடுகளில் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 2.30 லட்சம் வீடுகள் பயன்பெறும், ரூ.2,050 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து 65.5 கி.மீ தொலைவுக்கு தேசியநெடுஞ்சாலை 150சிக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி,சூர்-சென்னை 6 வழி, தேசிய நெஞ்சாலைக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.2100 கோடியாகும்.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி அங்கிருந்து மும்பைக்கு புறப்படுகிறார். மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி ரூ.38ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மும்பை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் 2ஏ மற்றும் 7லைன் ஆகிய பாதைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.12,600 கோடியாகும். அதன்பின்மெட்ரோ ரயிலிலும் பிரதமர் மோடி பயணிக்க உள்ளார்.

நாகாலாந்து,திரிபுரா, மேகாலயா தேர்தல் தேதி வெளியானது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு அடிக்கல், சாலை விரிவாக்கம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மறுவிரிவாக்கப் பணிகள் ஆகியவற்றுக்கு பிரதமர்மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி வருவதால், வானில் யாரும் எந்தவிதமான ட்ரோன்களும் பறக்கவிட மும்பை போலீஸார் தடை விதித்துள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி மும்பையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. 

மும்பை மெட்ரோ ரயிலின் 2ஏ பிரிவு, புறநகர் தஹிசர்  முதல் டிஎன் நகர் வரை இணைக்கிறது. 7 ஜாயின்ட் ரயில் அந்தேரி கிழக்கு முதல் தஹிசர் கிழக்குவரை இணைக்கிறது. இந்த திட்டங்களுக்கு கடந்த 2015ம்ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் அவரை இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தவிர மும்பை1 என்ற செல்போன் செயலியையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார். இந்த செயலி மூலம் மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க முடியும், டிஜிட்டல் பரிமாற்றங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கி கூட்ட நெரிசலில் நிற்காமல் பயணிகள் செல்ல முடியும். 

click me!