சண்டைக்கு தயாராக இருந்த 5 சேவல்கள் கைது; புதுவை போலீஸ் அதிரடி

By Velmurugan sFirst Published Jan 19, 2023, 9:58 AM IST
Highlights

புதுச்சேரி மாநிலத்தில் பந்தயம் வைத்து சேவல் சண்டை நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் அனுப்பப்பட்ட நிலையில், சண்டைக்கு தயாராக இருந்த சேவல்களுக்கு ஜாமீன் கிடைக்காததால் கடந்த 5 நாட்களாக காவல் நிலையத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டில் பொங்கல் பண்டிகையன்று பந்தயம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து முதலியார்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது  திலகர் நகரை சேர்ந்த சின்னதம்பி, பிரதாப் ஆகியோர் சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துகளை விற்றால் ஆப்பு தான்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சண்டையில் எந்த சேவல் ஜெயிக்கும் என கேட்டு பந்தையமாக பணம் வைத்து ஒரு கூட்டமே விளையாடியது தெரியவந்தது. காவல் துறையினரை பார்த்தவுடன் அனைவரும் தப்பி ஓடினார்கள். இருப்பினும் பந்தயம் நடத்திய சின்னதம்பி, பிரதாப் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும் சேவல்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 5 நாட்களாக அவை முதலியார்பேட்டை காவல் நிலைய நுழைவு வாயிலில் கூண்டில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களாக ஜாவா, கலிவா, கதிர், யாகத் ஆகிய பெயர்களை கொண்ட சேவல்களூக்கு நீரும், உணவும் வைத்து பராமரித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை!அதை வீர விளையாட்டாக கருதாமல் தடை செய்யுங்கள்! பீட்டாவுக்கு ஆதரவாக தாமரை?

மேலும் பந்தயம் நடத்தியவர்களை காவல் நிலைய முன்ஜாமனில் வெளியிட்டாலும் சேவல்களுக்கு ஜாமின் கொடுத்தால் மட்டுமே சேவல்களை வெளியிட முடியும் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். வழக்கு முடியும் வரை  சேவல்களை பராமரிக்க வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

click me!