லாரியும் காரும் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பலி..!

Published : Jan 19, 2023, 09:31 AM IST
லாரியும் காரும் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பலி..!

சுருக்கம்

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள மங்கான் பகுதியில் எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள மங்கான் பகுதியில் எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த  கோர விபத்தில் 4 பெண்கள் உள்பட 9 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். , 4 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தத 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிகாலையில் பனிமூட்டம் விபத்து நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!