தேசிய கட்சிகளில் அதிக வருமானம் பெற்ற கட்சி பாஜக.. திமுகவும் லிஸ்ட்ல இருக்கு! எத்தனையாவது இடம் தெரியுமா?

By Raghupati RFirst Published Jan 18, 2023, 10:08 PM IST
Highlights

நாட்டிலுள்ள தேசியக் கட்சிகளில்  மத்தியில் ஆளும் பாஜகதான் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது.

2021-22 நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜக மொத்தம் ரூ.1,917.12 கோடியைப் பெற்றது மற்றும் ரூ. 854.46 கோடி செலவழித்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் கணக்கு தெரிவிக்கிறது.

தேசிய கட்சிகள் அறிவித்த மொத்த வரவுகளான ரூ.3,289 கோடியில் பாஜக 58% பங்கைப் பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அதன் வரவுகளில் 633% மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது 2020-21ல் ரூ.74.4 கோடியிலிருந்து 2021-22ல் ரூ.545.7 கோடியாக வளர்ந்தது. தேசிய கட்சிகளுக்கு கிடைத்த மொத்த ரசீதில் திரிணாமுல் மற்றும் காங்கிரஸுக்கு தலா 16.5% பங்கு இருந்தது.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

2021-22 ஆம் ஆண்டில் பாஜகவின் வரவுகளில் சுமார் 54%, அதாவது ரூ.1,033.7 கோடிகள் தேர்தல் பத்திரங்கள் வழியாக வந்தன, அதே ஆண்டில் திரிணாமுல் அதன் வருவாயில் 96% (ரூ. 528 கோடி) பத்திரங்கள் மூலம் ஈட்டியது. காங்கிரஸ் மானியங்கள், நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் அதன் மொத்த வருவாயை சுமார் ரூ.348 கோடியாகக் காட்டியுள்ளது. இது 2020-21ல் ரூ.95.4 கோடியாக இருந்தது.

2020-21 ஆம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் அறிவித்தது.  இதற்கிடையில், 2021-22ல் பத்திரங்கள் மூலம் ரூ.14 கோடி பெற்றதாக என்சிபி தெரிவித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் CPMன் நிதிகள் மொத்தம் ரூ 162.2 கோடியாக இருந்தது. 2020-21 இல் ரூ 171 கோடியாக இருந்தது.

அதே சமயம் NCPன் வரவுகள் 2020-2 இல் ரூ 34.9 கோடியிலிருந்து ரூ 75.8 கோடியாக இரட்டிப்பாகும். பிஎஸ்பியின் வருவாய் ரூ.52.4 கோடியில் இருந்து ரூ.43.7 கோடியாகவும் சரிந்துள்ளது. அதேபோல மாநில கட்சிகளில், திமுக 2021-22ல் மொத்தம் ரூ.318.7 கோடியும், பிஜேடி ரூ.307.2 கோடியும், டிஆர்எஸ் ரூ.279.4 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.93.7 கோடியும் பெற்றுள்ளதாக அறிவித்தது.

இதையும் படிங்க..ரஃபேல் வாட்ச் மன்னன்! ஈரோடு தேர்தல் - சவாலுக்கு நீங்கள் தயாரா அண்ணாமலை? வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்!

இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

click me!