
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக 25 வயது இளம்பெண் பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஏராளமானோர் பங்கேற்று எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் காயத்ரி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு... ரூ.2,18,200 வரை சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
தலித் சமூகத்தைச் சேர்ந்த காயத்ரி, பங்காருபேட்டை அடுத்த காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் தான் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். கோலார் தங்க வயதில் உள்ள கெங்கல் அனுமந்தையா சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். பல்கலைக்கழக அளவில் 4வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிப்பு... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக் கல்வித்துறை!!
இந்த நிலையில் தற்போது சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதை அடுத்து அவர் விரைவில் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கடின உழைப்பால் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று 25 வயதில் நீதிபதியாகி இருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த காயத்ரி.