இறந்து போன காதல் ஜோடிகளின் சிலைக்கு திருமணம்.! குற்ற உணர்ச்சியால் பெற்றோர்கள் செய்த காரியம்

Published : Jan 18, 2023, 07:25 PM IST
இறந்து போன காதல் ஜோடிகளின் சிலைக்கு திருமணம்.! குற்ற உணர்ச்சியால் பெற்றோர்கள் செய்த காரியம்

சுருக்கம்

காதலர்கள் தற்கொலை செய்து கொண்டு 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்களது சிலைகளுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தாபி பகுதியில் கணேஷ் - ரஞ்சனா என்ற காதலர்கள் தீவிரமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்க, காதலர்கள் மனம் உடைந்து போக, கடைசியாக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்கள் உயிருடன் இருந்தபோது ஒன்றாக இருக்க முடியாமல் போனதற்கு அவர்களால் தான் என்று அவர்களது குடும்பத்தினர் உணர்ந்து, மனம் வருந்தியதாக கூறப்படுகிறது. இரண்டு குடும்பத்தினரும் குற்ற உணர்ச்சியால் காதல் ஜோடியின் சிலைகளை உருவாக்கினர்.

பிறகு சிலைகளுக்கு முறைப்படி திருமணம் நடந்தது. பையன் எங்கள் தூரத்து குடும்பத்துடன் தொடர்புடையவர் என்றும், இதனால் அவர்கள் திருமணத்திற்கு தயாராக இல்லை என்றும் சிறுமியின் தாத்தா பீம்சிங் பத்வி கூறினார். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்ததை பார்த்தோம்.

அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இதைச் செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இறந்து போன காதல் ஜோடிகளுக்கு பெற்றோர்கள் சிலை வைத்து திருமண செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..6 கோடி இன்சூரன்ஸ் பணம்! அரசு ஊழியரின் விபத்து நாடகம்.. துணிவுடன் தூக்கிய போலீஸ்! வேற மாறி சம்பவமா இருக்கே!

இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!