10 லட்சம் வாக்குச்சாவடிகளின் பாஜக ஊழியர்கள் முன் பிரதமர் மோடி உரை

By SG Balan  |  First Published Jun 15, 2023, 8:07 AM IST

வரும் 27ஆம் தேதி காணொளி காட்சி மூலம் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 10 லட்சம் பாஜக ஊழியர்களின் முன் பேச உள்ளார்.


பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வாக்குச்சாவடிகளை சேர்ந்த பாஜக ஊழியர்களிடையே காணொளி காட்சி மூலம் உரையாற்ற இருப்பதாவும் இந்த நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால், பிரதமர் மோடியின் கவனம் அந்த மாநிலத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

ஜூன் 27ஆம் தேதி அவர் மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்குச் செல்கிறார். அங்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து, பாஜகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஊழியர்களிடையே பேசும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

கஜுராஹோ தொகுதி பாஜக எம்.பி.யும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவருமான வி.டி. சர்மா இது குறித்துக் கூறுகையில், "நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகளை சேர்ந்த பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர் மத்தியில் பிரதமர் மோடி போபாலில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2,500 பாஜக தலைவர்கள் அதில் பங்கேற்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.மத்திய பிரதேசத்தில் உள்ள 64,100 வாக்குச்சாவடிகளை சேர்ந்த 38 லட்சம் பாஜகவினர் பிரதமர் மோடியின் உரை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

அமைச்சரை அலறவிடும் அமலாக்கத்துறை உருவானது எப்படி? அதன் அதிகாரங்கள் எவை?

போபாலில் பிரதமர் வாகன பேரணி நடத்தவும் வாய்ப்பு உள்ளது என்றும் அதுபற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.

27ஆம் தேதி உரை நிகழ்ச்சிக்குப் பின் பிரதமர் மோடி மாநிலத்தின் தார் பகுதிக்கும் செல்வதாகவும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் வி.டி. சர்மா தகவல் கூறியிருக்கிறார்.

லுங்கி, நைட்டி அணிந்து வெளியே செல்லத் தடை! நொய்டா குடியிருப்பில் நூதன கட்டுப்பாடு

click me!