BREAKING : கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ

Published : Jun 14, 2023, 10:31 PM IST
BREAKING : கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ

சுருக்கம்

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பிரிவில் உள்ள செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது.

பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்

உடனே மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. டிபார்ச்சர் லவுஞ்ச் பகுதியில் உள்ள டி போர்டல் பகுதியில் இரவு 9.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டி போர்டல் என்பது பயணிகள் போர்டிங் பாஸ் பெறும் பகுதி ஆகும். பாதுகாப்பு சோதனைச் சாவடியின் ஒரு பகுதியும் தீப்பிடித்து எரிந்தது.

விமான நிலையத்தின் ஒரு பகுதியைச் சுடர் சூழ்ந்துள்ளதை அந்த இடத்தில் இருந்து காட்சிகள் காட்டுகின்றன. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் இதுவரை இல்லை. தீ விபத்துக்கான காரணம் உரிய விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

120 பெண்கள்.. 1900 நிர்வாண படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்! யார் இந்த நாகர்கோவில் காசி.?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!