புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!

Published : May 18, 2023, 09:32 PM ISTUpdated : May 19, 2023, 06:29 PM IST
 புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!

சுருக்கம்

சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். 

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் நரேந்திர மோடியால், இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், வரும் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், திறந்து வைக்கப்படுகிறது. நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மே 26, 2014 அன்று பிரதமராகப் பதவியேற்றார். தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் திடீரென தீப்பிடித்த டிரான்ஸ்பார்மர்! ஆட்டோ, கடை தீயில் நாசம்!

இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உள்ள ஊழியர்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்ட புதிய சீருடையை அணிந்து பணியாற்றுவார்கள்.

புதிய கட்டமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. அவை கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று அழைக்கப்பட்டுகின்றன. மேலும் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி வாயிலகள் உள்ளன.

2020 டிசம்பரில் பிரதமர் மோடியால் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மோடி தலைமையில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிறப்பு தொடர்பு பிரச்சாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது.

Who is Siddaramaiah?: 2வது முறை கர்நாடக முதல்வராகும் சித்தராமையாவின் அரசியல் வரலாறு

மே 30ஆம் தேதி பிரம்மாண்ட பேரணியுடன் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த நாள் மே 31ஆம் தேதி பிரதமரின் இரண்டாவது பேரணி நடைபெறும். நாடு முழுவதும் பாஜக மூத்த தலைவர்களின் 51 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 396 மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

இந்த பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பாஜகவின் முதல்வர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் அழைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காவிட்டால்... காங்கிரஸ் மேலிடத்தை எச்சரிக்கும் பரமேஸ்வரா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!