தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காவிட்டால்... காங்கிரஸ் மேலிடத்தை எச்சரிக்கும் பரமேஸ்வரா

By SG Balan  |  First Published May 18, 2023, 8:24 PM IST

தலித் சமூகத்தினர் புதிய காங்கிரஸ் அரசு மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள் என்றும் தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் ஜி. பரமேஸ்வரா சொல்கிறார்.


கர்நாடகாவில் தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படாவிட்டால், பாதகமான எதிர்வினைகள் வரும் என்றும், அது கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி. பரமேஸ்வரா கட்சி தலைமையை எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் ஹெச்.டி. குமாரசாமி ஆட்சி அமைத்தபோது துணை முதல்வராக இருந்தவர் ஜி. பரமேஸ்வரா. 71 வயதாகும் இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீண்ட காலம் (எட்டு ஆண்டுகள்) பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவரும்கூட.

Latest Videos

சித்தராமையா முதல்வராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், டி.கே. சிவக்குமார் மட்டுமே துணைவேந்தராக இருப்பார் என்றும் காங்கிரஸ் தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பரமேஸ்வரா கட்சித் தலைமையை மறைமுக எச்சரித்துள்ளார்.

மத்திய சட்ட அமைச்சகத்தில் மீண்டும் மாற்றம்! இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகல் புதிய இலாகா!

சிவக்குமார் தான் மட்டுமே துணை முதல்வராக இருக்க வேண்டும் என்று தலைமைக்கு நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன பரமேஸ்வரா, "சிவகுமாரின் பார்வையில் அவர் கூறியது சரியாக இருக்கலாம், ஆனால் கட்சி மேலிடத்தின் பார்வை வேறுபட்டதாக இருக்கக்கூடும். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என் எதிர்பார்க்கிறோம்..." என்றார்.

தலித்துகள், லிங்காயத்துகள் மற்றும் சிறுபான்மையினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வலுவாக நின்றதை சுட்டிக்காட்டிய பரமேஸ்வரா, கர்நாடக மாநிலத்தில் உள்ள 51 தலித் தொகுதிகளில் 35 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்றும் எடுத்துக்கூறினார்.

தலித் சமூகத்தினருக்கு துணை முதல்வர் பதவி வழங்காமல் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்துப் பேசிய அவர், பொதுமக்கள், குறிப்பாக தலித் சமூகத்தினர் அரசின் மீது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்றார்.

Who is DK Shivakumar?: கர்நாடக துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்! அரசியலில் முன்னேறியது எப்படி?

"சித்தராமையா 2வது முறையாக முதல்வராகிறார், அவர் நல்ல நிர்வாகத்தை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம். எங்கள் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகம். இந்த முடிவை நான் வரவேற்கிறேன். மேலும் நல்ல நிர்வாகத்தை வழங்குவோம் என நம்பிக்கை கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.

துமகுரு மாவட்டத்தில் உள்ள கொரட்டகெரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் ஜி. பரமேஸ்வரா. 2013ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது நடந்த  சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அப்போதே முதல்வர் பதவிக்கான போட்டியாளராகவும் இருந்தார். ஆனால் அவர் தோற்கடிக்கப்பட்டதால், சித்தராமையா முதல்வர் பதவிக்கு வந்தார். அப்போது பரமேஸ்வராவை மேலவை உறுப்பினர் ஆக்கி, அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

கொலையில் முடிந்த 9 வருட கள்ளக்காதல்! குழந்தை கேட்ட காதலி கழுத்தை அறுத்துக் கொலை

click me!