சிபிஐ வைர விழா: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்! புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கம் திறப்பு!

By SG Balan  |  First Published Apr 3, 2023, 7:22 AM IST

இன்று (ஏப்ரல் 3) மதியம் 12 மணிக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.


மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, தொடங்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த அமைப்பின் வைர விழா கொண்டாட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் இந்த வைர விழாக் கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

4 வயதில் புத்தகம் எழுதி கின்னஸ் சாதனை படைத்த சிறுவனம்! 1000 பிரதிகளைத் தாட்டி விற்பனை

Tap to resize

Latest Videos

இந்த விழாவில், மேகாலயா மாநிலம் ஷில்லாங், மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் கட்டப்பட்டிருக்கும் புதிய சிபிஐ அலுவலகங்களையும் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். சிபிஐ வைரவிழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை, நாணயம் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளன.

சிபிஐயின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையிர் பிரதமர் இன்றைய விழாவில் தொடங்கி வைப்பார். சிறப்பாக பணிபுரிந்த சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் வழங்கப்பட உள்ளது. இதேபோல, சிறப்பாக செயல்பட்டுவரும் விசாரணை அதிகாரிகளுக்கு தங்க பதக்ககளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

பப்புவா நியூ கினியாவில் 7.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

click me!