மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்துவது தொடர்பாக ஆலோசிக்க ஜூலை 3ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்துவது தொடர்பாக ஆலோசிக்க ஜூலை 3ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சுக்கு மத்தியில், இந்த மத்திய அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது. பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பரில் G20 உச்சி மாநாட்டை நடத்தும் தேசிய தலைநகரில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநாட்டு மையத்தில் ஜூலை 3ஆம் தேதி (திங்கட்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடக்கும்: சரத் பவார் அறிவிப்பு
புதன்கிழமை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கு கட்சியைத் தயார் செய்வது குறித்துப் பேசப்பட்டது. பாஜக ஆளும் மத்திய, மாநில அரசுகளிலும், கட்சி அமைப்பிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக, அமித் ஷா, கே.பி.நட்டா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் பி. எல். சந்தோஷ் ஆகியோர் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து பல சுற்று ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
சுனிதா விஸ்வநாத் யார்? அமெரிக்காவில் ராகுல் காந்தியை சந்தித்த பின் சர்ச்சையில் சிக்கியது ஏன்?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இருப்பினும், மே மாதம், மோடி அரசாங்கம் கிரண் ரிஜிஜூவை சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக அர்ஜுன் ராம் மேக்வாலை நியமித்தது.
ஜூலை 2021 இல், மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெரிய மாற்றங்கள் இருந்தன. 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். முந்தைய மாற்றத்தின்போது, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மற்றும் சந்தோஷ் கங்வார் போன்ற அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ரானே, சர்பானந்தா சோனோவால் மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் போன்ற புதியவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
வேறு சாதி பையனை காதலித்த மகளைக் கொன்ற தந்தை! மனமுடைந்து ரயிலில் பாய்ந்த காதலன்!