எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடக்கும்: சரத் பவார் அறிவிப்பு

Published : Jun 29, 2023, 05:06 PM ISTUpdated : Jun 29, 2023, 05:18 PM IST
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடக்கும்: சரத் பவார் அறிவிப்பு

சுருக்கம்

2024 பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று சரத் பவார் அறிவித்துள்ளார்.

2024 பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13-14 தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில்  உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இன்ஷா அல்லாஹ்... ஆட்டின் விலை ரூ.1 கோடி: விற்க மறுத்த உரிமையாளர்!

வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதலில் தேசியவாத  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறார்.

அதன்படி, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில், 18க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். இது முதல் கூட்டம்தான் இன்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் கூறப்பட்டது. அதன்படி ஜூலை 13-14ஆம் தேதிகளில் பெங்களூருவில் 2வது கூட்டம் நடைபெற இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!