ரயில் பயணிகளுக்கு, இலவச உணவு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ரயில்வே நெட்வொர்க் என்பது நாட்டின் உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு, பயனம் நேரம் குறைவு போன்ற பல காரணங்கள் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணம் சிறந்த தேர்வாகும். இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ரயில் பயணிகளுக்கு, இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...
ஆனால் எல்லா ரயில்களிலும் இந்த சலுகை கிடைக்காது. ரயில் தாமதமாக வரும் பட்சத்தில் ரயில்வே தரப்பில் இருந்து இலவச உணவு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. சதாப்தி, ராஜ்தானி அல்லது துரந்தோவில் பயணம் செய்து, அவற்றில் ஏதேனும் தாமதமாக இருந்தால், இந்த சிறப்புச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்! ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தால், இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது. மதிய உணவு அல்லது இரவு உணவு நேரத்தின் அடிப்படையில், அதற்கேற்ப உணவுகள் செய்யப்படும். கூடுதலாக, நீங்கள் டீ, காபி மற்றும் பிஸ்கட் போன்றவற்றையும் பெறலாம்.
IRCTC விதிமுறைகளின் கீழ் பயணிகளுக்கு இலவச உணவு (ரயில்வே இலவச உணவு) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரயில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணிகள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இந்த தகவல் மிகவும் உதவியாக இருக்கும்.
ரயில்களில் உணவு தயாரித்தல் மற்றும் உணவு விநியோகம் ஆகிய பணிகளை ஐ.ஆர்.சி.டி.சி மேற்கொண்டு வருகிறது.. உணவு தயாரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய சமையலறைகளை கட்டுவது மற்றும் பழையவற்றை புதுப்பித்தல் அடிப்படை சமையலறைகள் மண்டல ரயில்வேயால் நிர்வகிக்கப்பட வேண்டும். மண்டல ரயில்வேயால் நிர்வகிக்கப்படும் சமையலறைகள் ஐஆர்சிடிசிக்கு மாற்றப்படும். அவர்கள் ஃபுட் கோர்ட், ஃபாஸ்ட் ஃபுட் யூனிட்கள் மற்றும் ஃபுட் பிளாசா ஆகியவற்றின் நிர்வாகத்தை தொடர்ந்து மேற்பார்வையிடுவார்கள். ரயில் பயணிகளுக்கு உயர்தர, சுகாதாரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் எத்தனை லட்சம் காலியிடங்கள் உள்ளது ? RTI கேள்விக்கு கிடைத்த அதிர்ச்சி பதில்