அந்த விஷயத்தில் மோடியிடம் பணிந்த கேரள முதல்வர்... படமாக்க ஆசைப்படும் செல்வராகவன்!

By vinoth kumarFirst Published Nov 26, 2018, 4:30 PM IST
Highlights

சபரி மலையில் மத்தியமைச்சரை தடுத்த எஸ்.பி. யதீஷ் சந்திராவை மீண்டும் பழைய பதவிக்கே திருப்பியனுப்பியது கேரள அரசு. (எவன் டா சொன்னான்? எவன் டா சொன்னான், டெல்லி பிரஷருக்கு காம்ரேடுகள் அடிபணிய மாட்டாங்கன்னு? இங்க வாங்கடா, யதீஷை கேளுங்கடா)

* இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியாக இருந்து வருகிறோம். இது கூட்டணியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்! என திருமா வளவன் கூறியுள்ளார். (அண்ணே நீங்க ரெண்டு வருஷம் தோழமையை மட்டும் நினைக்கிறீங்க. ஆனா ஸ்டாலினும், துரைமுருகனும் அதுக்கு சில மாசங்கள் முன்னாடி இருந்த மக்கள் நல கூட்டணியையும் சேர்த்து நினைக்கிறாய்ங்க. அதாம்ணே சிக்கலே.)

* நிவாரண தொகையை முடிவு செய்வது பிரதமர், அமைச்சர் எடுக்கும் முடிவு மட்டுமல்ல, இதில் மத்திய குழு அறிக்கை சார்ந்துதான் நிவாரணம் வழங்கப்படும்! என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். (தல, தமிழக அரசு கேட்ட அம்மாம் பெரிய நிதியை, அப்படியே கொடுக்க வாய்ப்பில்லைன்னு ஸ்ட்ரெயிட்டா சொல்லிடுங்க. எதுக்கு வளைச்சு, சுத்தி, வகுந்தெடுத்து பேசிக்கிட்டு?)

* ஆடுகள் வனத்தில் புல் மேய தடைவிதிக்க வேண்டும் என்று பேசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மனநலம்  பாதிக்கப்பட்டவர் என்று அழைப்பதில் தவறில்லை! என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். (இன்னொரு முற சொல்லுங்க! அட இன்னொரு முற சொல்லுங்க!ன்னு, சந்திராவை நீங்க திட்டுறதை காது குளிர கேட்பாரே பிரதமர் மோடி.)

* சபரி மலையில் மத்தியமைச்சரை தடுத்த எஸ்.பி. யதீஷ் சந்திராவை மீண்டும் பழைய பதவிக்கே திருப்பியனுப்பியது கேரள அரசு. (எவன் டா சொன்னான்? எவன் டா சொன்னான், டெல்லி பிரஷருக்கு காம்ரேடுகள் அடிபணிய மாட்டாங்கன்னு? இங்க வாங்கடா, யதீஷை கேளுங்கடா)

* ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும்! என்பதுதான் எனது ஆசை! என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். (ஓ.கே. அப்போ அந்த நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி பொட்டிகளோட இந்த ‘என்.ஜி.கே.’ பொட்டியையும் தூக்கி பரண்ல வையுங்கடா தம்பிகளா. தொடர்ந்து ரிலீஸாகாத படங்களை இயக்கி, ஹாட்ரிக் அடிச்ச பெருமை அண்ணனுக்கு வந்து சேரட்டும்.)

click me!