கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடி, விதான் சவுதா அருகே வரவேற்கக் காத்திருந்த பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களைப் பார்த்ததும் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகத்தில் காரை நிறுத்தி, அவர்களிடம் கையை அசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடி, விதான் சவுதா அருகே வரவேற்கக் காத்திருந்த பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களைப் பார்த்ததும் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகத்தில் காரை நிறுத்தி, அவர்களிடம் கையை அசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்
கர்நாடகம், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தென் மாநிலங்களுக்கு வந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு விமானநிலையத்துக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி இன்று காலை வந்தார்.
சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: டிக்கெட்விவரம்
பெங்களூரு விதான் சவுதா அருகே இருக்கும், கன்னடத் துறவி, கவிஞர் கனகா தாசா சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மகிரிஷி வால்மீகி சிலைக்கும் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பேஸ்புக் மெட்டாவின் ஆட் குறைப்பு இந்தியாவிலும் பாதிப்பு ! உண்மை விவரங்கள் என்ன?
இந்த நிகழ்ச்சியின்போது, நிரஞ்சனாநந்தா பூரி சுவாமிஜி, வால்மீகி பிரசன்னநந்தா சுவாமிஜி, கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சபாநாயகர் விஷ்வேஸ்வரா ஹெக்டே காக்ரே ஆகியோர் இருந்தனர்.
அங்கிருந்து பிரதமர் மோடி புறப்படும் முன், விதான் சவுதா பகுதியில் ஏராளமான பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் குழுமி வரவேற்புத் தெரிவித்தனர். இதைப் பார்ததுக்கொண்டே அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திடீரென காரை நிறுத்தினார்.
காரில் இருந்தவாரே பாஜக தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் பார்த்து கையசைத்து, வாழ்த்துக்களைக் கூறி பிரதமர் மோடி அங்கிருந்து கேஎஸ்ஆர் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டார். தொண்டர்களைப் பார்த்து காரை நிறுத்தி பிரதமர் மோடி கையசைத்ததும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
பிரதமர் மோடியின் பயண விவரமும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள திட்டங்களும்... முழு விவரம் உள்ளே!!
பிரதமர் மோடி காரை நிறுத்தி தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்ததும், பாஜக தொண்டர்கள் பாஜக கொடியை அசைத்து, மோடி, மோடி என்று சத்தமிட்டு, கரகோஷமிட்டனர்.
அதன்பின் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு கேஎஸ்ஆர் ரயில்நிலையம் சென்று, மைசூர்-சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், காசியாத்திரை எக்ஸ்பிரஸ் ரயிலையும் தொடங்கி வைத்தார்