Solar Power India: சூரிய மின்சக்திக்கு மாறும் இந்தியா! 5 மாதங்களில் 400 கோடி டாலர் எரிபொருள் சேமித்து சாதனை

By Pothy Raj  |  First Published Nov 10, 2022, 2:01 PM IST

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்தியா சூரிய சக்தியை அதிகளவு பயன்படுத்தியதன் காரணமாக, ஏறக்குறைய 420 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருளை சேமித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது.


2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்தியா சூரிய சக்தியை அதிகளவு பயன்படுத்தியதன் காரணமாக, ஏறக்குறைய 420 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருளை சேமித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது.

இந்த தொகை 1.94 கோடி டன் நிலக்கரி அளவுக்கு சமமாகும். ஏற்கெனவே நிலக்கரி பற்றாக்குறையால் திணறிவரும் இந்தியா, சோலார் மின்சக்தி மாறியதால் 1.94 கோடி டன் நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்துள்ளது

Latest Videos

undefined

ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

எரிசக்தி மற்றும் சோலார் சக்தி, சுத்தமான காற்று குறித்து ஆய்வு செய்து வரும் எம்பர் எனும் ஆய்வுநிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதிலும் டாப்-10 பொருளாதாரங்களில், ஆசியாவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, வியட்நாம் நாடுகள் உள்ளன

அதில் சோலார் மின்சக்தி உற்பத்தியில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பைன், தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிகமான பங்களிப்பு செய்கின்றன. இந்த நாடுகளால், கடந்த 6 மாதங்களில் 3400 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருள் பயன்படுத்துவது சேமிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாட்டில் 9சதவீதமாகும். 

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவு:

இந்தியாவைப் பொறுத்தவரை, 2022, ஜனவரி முதல் ஜூன்வரையிலான மாதங்களில் 420 கோடி டாலர் மதிப்பிலான நிலக்கரியை சேமித்துள்ளது. அதாவது, 1.94 கோடிடன் நிலக்கரியை பயன்படுத்தாமல் இந்தியா தவிர்த்துள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை அதிகமான பங்களிப்பு செய்து வருகிறது. சீனாவில் ஒட்டுமொத்த மின்சக்தி தேவையில் 5 சதவீதம் சோலார் மின்சக்தி மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 2100 கோடி டாலர் மதிப்பிலான நிலக்கரி, இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைத்துள்ளது

ஜப்பான் 2வது இடத்தில் உள்ளது. சோலார் மின்சக்தியை பயன்படுத்துவதால், 560 கோடி டாலர் மதிப்பிலான எரிபொருள் பயன்படுத்துவதை மிச்சப்படுத்தியுள்ளது. 

காங்கிரசால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது.! இமாச்சல பிரதேச தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு !

வியட்நாம் நாடு சூரிய சக்தியை பயன்படுத்தியதால், கடந்த 6 மாதங்களில் 170 கோடி டாலர் மதிப்பிலான திடஎரிபொருள் பயன்படுத்துவதை மிச்சப்படுத்தியுள்ளது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சோலார் மின்சக்தி பயன்பாடு மெல்ல அதிகரித்து வருகிறது, ஆனால், திடஎரிபொருள் சேமிக்கும் அளவு உயரவில்லை.

கடந்த 6 மாதங்களில், தாய்லாந்து மின்சாரத் தேவையில் 2 சதவீதத்தை சூரியமின்சக்தி நிறைவேற்றியுள்ளது. இது டாலர் மதிப்பில் 20.09 கோடி டாலர் மதிப்பிலான திடஎரிபொருள் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடு, 7.80 கோடிக்கு திடஎரிபொருள் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளது. தென் கொரியா தனது மின்சாரத் தேவையில் 5 சதவீதத்தை சோலார் மின்சக்தி மூலம் நிறைவேற்றுகிறது. இதன் மூலம் அந்த நாடு 150 கோடி டாலர் மதிப்பிலான திடஎரிபொருளை சேமித்துள்ளது

தெற்காசிய எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் விபூதி கார்க் கூறுகையில் “ கடந்த சில மாதங்களாக நிலக்கரி, எரிவாயு இறக்குமதி செய்வது எந்த அளவு விலைஉயர்ந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது, குறிப்பாக சூரிய மின்சக்திக்கு மாறுவதால், செலவு குறையும், நுகர்வோர்கள் பணம் செலவிடுவது குறையும். இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள பிற நாடுகளும் புதுப்பிக்கதக்க எரிசக்திக்கு மாற வேண்டும், அதில் அதிகமான முதலீடு செய்ய வேண்டும்”எ னத் தெரிவித்தார்
 

click me!