
நாட்டின் 5வது வந்தே பாரத் ரயிலையும், தென் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரயிலான, மைசூரு-சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கர்நாடகம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும், நாளையும் பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூரு விமானநிலையம் வந்தார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் குஜராத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
அங்கிருந்து எம்எல்ஏ பவனுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்து பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில்வே நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து பெங்களூரு வழியாக சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதுவரை இந்தியாவில் 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது 5வது வந்தே பாரத் எஸ்பிரஸ் ரயிலாகும்.
பிரதமர் மோடியின் பயண விவரமும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள திட்டங்களும்... முழு விவரம் உள்ளே!!
இது தவிர, பாரத் கவுரவ் காசி தர்ஷன் ரயிலையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காசியாத்திரை செல்வோரின் பயணத்தை நினைவாக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
காசி யாத்திரை செல்லும் பயணிகளுக்கு கர்நாடக அரசு சார்பில் ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ரயில் வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித இடங்களுக்குச் செல்கிறது.
சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்தில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். இந்த ரயில் பிரதமர் மோடியால் இன்று தொடங்கப்பட்டாலும், வர்த்தகரீதியாக 12ம் தேதி முதல் தனது பயணத்தை தொடங்க உள்ளது.
சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.அங்கிருந்து 12.30 மணிக்கு மைசூரு சென்றடையும். சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க சேர் காரில் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சொகுசு இருக்கைக்கு, ரூ.2,295 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து பெங்களூரு வரை சேர் காரில் செல்ல ரூ.995 கட்டணமாகவும், எக்ஸிகியூட்டிவ் காரில் செல்ல ரூ.1,885 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது