பாட்னா சாஹிப் குருத்வாராவில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

By SG Balan  |  First Published May 13, 2024, 11:55 AM IST

குருத்வாராவிற்குச் சென்ற பிரதமர் மோடி தலையில் சீக்கியர்களின் பாணியில் காவி தலைப்பாகை அணிந்திருந்தார். அங்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட அவர், குருத்வாராவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கும் பரிமாறினார்.


பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று பாட்னாவில் தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா ரோடு ஷோவைத் தொடர்ந்து பிரதமர் மோடி குருத்வாராவுக்குச் சென்றபோது, இந்த சேவையில் ஈடுபட்டார்.

பாட்னாவின் ஹர்மந்திர் சாஹிப், பாட்னா சாஹிப் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது 10வது சீக்கிய குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடமாகும். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகர்கள் தினமும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், திங்கட்கிழமை குருத்வாராவிற்குச் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு யாத்ரீகர்கள் மற்றும் குருத்வாரா நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை - டெல்லி நான்-ஸ்டாப் விமான சேவை அறிமுகம்! வெளிநாட்டுப் பயணங்களை எளிமையாக்கும் ஏர் இந்தியா!

பாட்னா சாகிப் குருத்வாராவில் உணவு பரிமாறும் பிரதமர் மோடி pic.twitter.com/mgAEV6PoWZ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குருத்வாராவிற்குச் சென்ற பிரதமர் மோடி தலையில் சீக்கியர்களின் பாணியில் காவி தலைப்பாகை அணிந்திருந்தார். அங்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட அவர், குருத்வாராவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கும் பரிமாறினார்.

இன்று பீகாரில் ஹாஜிபூர், சரண் மற்றும் முசாபர்பூரில் நடைபெறும் மூன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

புதுசா கிளம்பி இருக்கும் ஸ்கிராட்ச் கார்டு மோசடி! வெகுளித்தனமா 18 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

click me!