அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை சீனா மாற்றியதன் பின்னணியில் பிரதமர் மோடியின் மௌனம் இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி உள்ளது காங்கிரஸ்.
அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது.
இந்த நிலையில் இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியுள்ளது. இந்த பெயர் மாற்ற அறிவிப்பை ஏப்ரல் 2 ஆம் தேதி சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அண்டை நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் கிளீன் சிட் என்றும்,எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மௌனம் ஏன் காக்கிறார் என்றும் கூறியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தியா - சீனா எல்லையில் தற்போது நிலையாக இருப்பதாக சீன தூதர் ஒருவர் சமீபத்தில் கூறியிருக்கிறார். ஆனால் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு தற்போது மூன்றாவது சீனப் பெயர்களை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அவ்வாறு செய்தது. ஜூன் மாதத்தில் சீனாவுக்கு பிரதமர் மோடியின் க்ளீன் சிட்க்கு நாங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டிய விலை இதுதான். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சீனப் படைகள் இந்திய ரோந்துக் குழுக்களுக்கு முன்னர் தடையின்றி அணுகக்கூடிய மூலோபாய டெப்சாங் சமவெளிகளை அணுகுவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இப்போது சீனர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நிலையைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கின்றனர்.
அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேச மக்கள் இந்தியாவின் பெருமை மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா மற்றும் அனைத்து இந்தியர்களின் கூட்டு உறுதியுடன், இந்த உண்மைகள் எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க..நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்