மணிப்பூரில் உலகின் மிக உயரமான ரயில் பாலம்; இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்

Published : Apr 04, 2023, 03:31 PM ISTUpdated : Apr 04, 2023, 03:32 PM IST
மணிப்பூரில் உலகின் மிக உயரமான ரயில் பாலம்; இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்

சுருக்கம்

மணிப்பூரில் உள்ள கட்டப்பட்டுள்ள 141 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான தூண் ரயில் பாலத்தின் கடைசி கட்டப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

ஜிராபம்-இம்பால் புதிய வழித்தட ரயில் திட்டம் வடகிழக்கு பிராந்தியத்திற்கான அத்தியாவசிய இணைப்பு திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 93.30 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன என்று இதுகுறித்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிராபம்-இம்பால் இரயில்வே திட்டம் 111 கி.மீ.க்கும் மேல் நீளமான கடினமான நிலப்பரப்பில் பல சுரங்கங்கள் மற்றும் பாலங்களை உள்ளடக்கிய ரயில் பாதை ஆகும். இந்தத் திட்டத்தில் மொத்த 61.32 கிமீ சுரங்கப்பாதைகள் உள்ளது. அதில் 59.11 கிமீ சுரங்கப்பாதை பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தம் 11 பெரிய பாலங்கள் மற்றும் 137 சிறிய பாலங்கள் இருக்கும். இதில் ஐந்து பெரிய பாலங்களும், 101 சிறிய பாலங்களும் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 141 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான தூண் ரயில் பாலம் அமைகிறது. இதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்தத் திட்டம் நிறைவடைந்த பிறகு, ஜிராபமில் இருந்து இம்பாலை அடைவதற்கான நேரம் இரண்டரை மணிநேரமாகக் குறையும்.  தற்போது ஜிராபம் - இம்பால் இடையே சாலை வழியாகச் செல்ல 10 மணிநேரம் ஆகிறது.

காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்துகொண்டவர்களின் கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதில்

ஐரோப்பாவில் உள்ள மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தை மிஞ்சும் வகையில் 141 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் குதுப்மினாரை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருக்கும். இம்பாலுக்கு மேற்கே 65 கிமீ தொலைவில் நோனி மாவட்டத்தில் உள்ள மரங்சிங் கிராமத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. ரயில்வே பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 280 கோடி. பாலத்தின் மொத்த நீளம் 703 மீட்டர்.

கனமழை மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் போன்றவற்றில் உள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்தத் திட்டத்தை முடிப்பதற்காக வடகிழக்கு ரயில்வே இரவு பகலாக உழைத்துவருகிறது. புதிய ரயில் திட்டம் மணிப்பூர் மக்களுடன் போக்குவரத்துக்குப் பயன்படுவதுடன், சிறிய அளவிலான தொழில்களை வளர்க்கவும், மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும் என்று அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த மாதிரி கண்டுபிடிப்புகளால் உண்மை மாறாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!