கடந்த ஆண்டு மைசூருவில் தங்கிய பிரதமர் மோடி.. ரூ.80 லட்சம் வாடகை பாக்கி.. ஹோட்டல் நிர்வாகம் மிரட்டல்..

By Asianet TamilFirst Published May 25, 2024, 7:37 PM IST
Highlights

பிரதமர் மோடி கடந்த ஆண்டு மைசூருவில் தங்கியிருந்த போது, ரூ.80 லட்சம் வாடகை கட்டணம் செலுத்தாதது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.


நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. கர்நாடக மாநில எல்லையை ஒட்டி, அதுவும் ஊட்டி - மைசூரு பிரதான சாலையில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டையில் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. 

1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த புலிகள் காப்பகம் 18,278 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகம் தொடங்கி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி இந்த புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

Latest Videos

கூகுள் மேப்பைப் பார்த்துச் சென்றதால் ஓடைக்குள் காரை விட்ட சுற்றுலா குழுவினர்!

இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் மைசூரு சென்றார். அப்போது மைசூருவில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கி பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். 
பின்னர் மறுநாள் நட்சத்திர ஹோட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டை சென்ற அவர், பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்றார்.

மேலும் 20 கி.மீ தூரம் ஜீப் சவாரி செய்த பிரதமர் வன விலங்குகளை பார்வையிட்டார். புலிகள், யானைகள் தவிர மலைப்பாம்பு, குள்ளநரி உள்ளிட்ட பல உயிரினங்களை மோடி பார்வையிட்டார். தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் பொன்விழா ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றார்.

இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம்! சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய ஒப்பந்தம்!

இந்த நிலையில் பிரதமர் மோடி விழாவில் பங்கேற்பதற்காக வந்து தங்கிய நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கட்டணம் ரூ.80 லட்சம் பாக்கி என்று கூறப்படுகிறது. இந்த பாக்கி தொகையை இன்னும் கர்நாடக வனத்துறை செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் வாடகை பாக்கியை செலுத்த தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நிலுவையில் உள்ள கட்டண பாக்கியை 1ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஹோட்டல் மிரட்டல் விடுத்துள்ளது.
 

click me!