கூகுள் மேப்பைப் பார்த்துச் சென்றதால் ஓடைக்குள் காரை விட்ட சுற்றுலா குழுவினர்!

By SG Balan  |  First Published May 25, 2024, 4:22 PM IST

ரோந்து சென்ற அருகில் உள்ள காவல் நிலைய போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகளின் மீட்பு முயற்சிகளால் காரில் பயணித்த நான்கு பேரும் காயமின்றி தப்பித்தனர். ஆனால் அவர்கள் வந்த கார் முழுவதும் நீரில் மூழ்கியது.


ஹைதராபாத்தில் இருந்து காரில் கேரளா வந்த ஒரு சுற்றுலாக் குழுவினர் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தி வழிபார்த்துச் சென்று குருப்பந்தரா அருகே ஒரு நீரோடைக்குள் காரை விட்டிருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொண்ட குழு ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என கேரள போலீசார் கூறுகின்றனர்.

Tap to resize

Latest Videos

கனமழை காரணமாக ஓடையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சாலை மூடப்பட்டிருந்ததாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அப்பகுதி பற்றி தெரியாததால், கூகுள் மேப்பைப் நம்பி அந்த வழியாகச் செல்லும்போது நேரடியாக நீர்நிலைக்குள் காரை விட்டுவிட்டனர்.

முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன? FIR பதிவு செய்த பின் காவல் நிலையத்தில் என்ன நடக்கும்?

ரோந்து சென்ற அருகில் உள்ள காவல் நிலைய போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகளின் மீட்பு முயற்சிகளால் காரில் பயணித்த நான்கு பேரும் காயமின்றி தப்பித்தனர். ஆனால் அவர்கள் வந்த கார் முழுவதும் நீரில் மூழ்கியது. வாகனத்தை வெளியே கொண்டுவரும் முயற்சி நடந்து வருகிறது என்று காடுதுறை காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் அல்ல. கடந்த ஆண்டு அக்டோபரில், கூகுள் மேப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி வந்த கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்தக் காரில் பயணித்த இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மழைக்காலத்தில் கூகுள் மேப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது குறித்த எச்சரிக்கை வழிகாட்டுதல்களை கேரள காவல்துறை வெளியிட்டது.

இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம்! சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய ஒப்பந்தம்!

click me!