தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 39 மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் அனைத்தும் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி மற்றும் காவலர்களின் கண்காணிப்பு போடப்பட்டு வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு வாக்கு எண்ணும் மையம் என்ற அடிப்படையில் 39 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அளவில் 5 கட்ட தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், வாக்கு சதவிகித விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17-C இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
undefined
வாக்கு சதவீதம் குறித்த சர்ச்சை எழுந்த காரணத்தால்தான் இந்த வழக்கு போடப்பட்டது என்று கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளில், வாக்கு சதவீதம் குறித்தான தகவல் வெளிவரும், ஆனால், அன்றைய தினத்தின் முழுமையான வாக்குப்பதிவான ஒரு நாள் கழித்தோ, 2 கழித்தோ வெளிவந்தது. இது குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்பினர். இதையடுத்து படிவம் 17c குறித்த விவரங்களை வெளியிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு சதவிகிதம் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலம், தொகுதிகள், மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு சதவீதம் ஆகியவை அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணைய செயலியில் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 17சி ஃபார்மில் பதிவான வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..