தீபாவளியை முன்னிட்டு #VocalForLocal இயக்கம் நாடு முழுவதும் பெரும் உத்வேகம் பெற்று வருகிறது என்றும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்டார் பிளஸ் சேனலில் ஒலிபரப்பாகும் பிரபல ‘அனுபமா’ தொடரின் நட்சத்திரங்கள் ரூபாலி கங்குலி மற்றும் கௌரவ் கண்ணா ஆகியோர் பிரதமர் மோடியின் Vocal For Local இயக்கத்திற்கான விளம்பரத்தில் தோன்றி உள்ளூர் மக்களுக்காகக் குரல் கொடுத்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு உள்ளூர் பொருட்களையே வாங்க மக்களை ஊக்குவிக்கும் அந்த விளம்பரத்திற்காக இவரும் நடித்துள்ளனர். டிவி தொடரில் வரும் அதே அனுபமா மற்றும் அனுஜ் கபாடியா பாத்ததிரங்களில் நடத்திருக்கிறார்கள். ட்விட்டரில் பிரதமர் மோடியும் இந்த விளம்பரத்தை ஷேர் செய்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு #VocalForLocal இயக்கம் நாடு முழுவதும் பெரும் உத்வேகம் பெற்று வருகிறது என்றும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கேதார்நாத்தில் ராகுல் காந்தியின் பாசாங்குத்தனம் இதுதான்! வீடியோ போட்டுக் காட்டும் பாஜக!
The movement is getting great momentum across the country. pic.twitter.com/9lcoGbAvoi
— Narendra Modi (@narendramodi)இந்த விளம்பரம் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூருக்கான குரல்) இன்ற இயக்கத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் பெரிய மற்றும் பிராண்டட் தயாரிப்புகளை வாங்குவதற்குப் பதில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குங்கள் என்று இந்த விளம்பரம் வலியுறுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த இந்த விளம்பரத்திற்கு நெட்டிசன்களும் ரிப்ளை செய்துள்ளனர். உள்ளூர் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தொலைக்காட்சி நட்சத்திரங்களை பயன்படுத்திய பிரதமரை அவர்கள் பாராட்டியுள்ளனர்.
உங்க வீட்ல வாஸ்து தோஷம் இருக்கா? இந்த வாஸ்து பரிகாரம் செய்தால் போதும்... எல்லாமே சக்சஸ் தான்!