Heeraben Modi: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்..!

Published : Dec 30, 2022, 06:27 AM ISTUpdated : Dec 30, 2022, 08:07 AM IST
Heeraben Modi: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்..!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நாட்களுக்கு அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும், மருத்துவமனை தரப்பிலும் அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. 

இதையும் படிங்க;- தாயின் காலடியில் அமர்ந்து பேசி குழந்தையாக மாறிய பிரதமர் மோடி.. பாத பூஜை செய்து 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்

இந்நிலையில், இன்று அதிகாலை  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார். பிரதமர் மோடியின் தாயார் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளார் என தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி உருக்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


குஜராத்தில் 2வது கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது வாக்களிக்க பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அவரின் தாயார் ஹீராபென் மோடியைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  பிரதமர் மோடியின் தாய் எடைக்கு நிகராக..60 கிலோ தங்கம் தானமாக கொடுத்து அசத்திய தொழிலதிபர் !!

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை