10, 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்… தேதிகளை வெளியிட்டது சிபிஎஸ்இ!!

By Narendran SFirst Published Dec 29, 2022, 10:31 PM IST
Highlights

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் குறித்த தகவலை சிபிஎஸ்இ வெளியிடப்பட்டுள்ளது. 

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் குறித்த தகவலை சிபிஎஸ்இ வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடையும். இதேபோல் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி முடிவடைகிறது.

இதையும் படிங்க: வருகிறது ரிமோட் மின்னணு வாக்கு எந்திரம் ! தேர்தல் ஆணையம் அறிமுகம்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு ஓவியம், ராய், குருங், தமாங், ஷெர்பா மற்றும் தாய் தாள்களுடன் தொடங்கி, கணித  அடிப்படைத் தாள்களுடன் முடிவடைகிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தொழில்முனைவோர் தாளில் தொடங்கி உளவியல் தாளுடன் முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது.

இதையும் படிங்க: இந்த 6 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கட்டாயம்... மன்சுக் மாண்டவியா அதிரடி!!

தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

click me!