
பாஜகவில் இணைந்த சில நாட்களில் பிரதமர் மோடியை சந்தித்தார் சி.ஆர்.கேசவன். இதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சிஆர் கேசவன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி என்றழைக்கப்படும் சி.ராஜகோபாலாச்சாரியின் கொள்ளு பேரன் சி.ஆர் கேசவன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (புதன்கிழமை) சந்தித்தார். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்த கேசவன், தன்னை இணைத்த கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.
அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவில் என்னை இணைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக நமது பிரதமர் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நாளில்" என்று கேசவன் கூறினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, இன்று நான் சி.ஆர் கேசவனை சந்தித்தேன். அவர் தனது வீட்டில் சமையற்காரராகப் பணிபுரியும் சுப்புலட்சுமியின் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த என். சுப்புலட்சுமி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வெற்றிகரமாக விண்ணப்பித்தார். அந்த திட்டம் அவரின் வாழ்க்கைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது” என்று கூறினார்.
பிரதமரின் சந்திப்புக்கு அடுத்து பேசிய சி.ஆர்.கேசவன், “எனது வீட்டில் உள்ளவர்களை பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம்’ வீடு பெற்றவர்களை நான் அறிவேன். எனது வீட்டில் பணிபுரியும் என். சுப்புலட்சுமி என்பவரின் கடிதத்தை பிரதமரிடம் அளித்தேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமரிடம் அளித்த கடிதத்தில் என். சுப்புலட்சுமி என்பவர் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நானும் பயனடைந்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி உள்ளது. உங்களால் நாங்கள் கவுரமாக வாழ்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?