தாயின் காலடியில் அமர்ந்து பேசி குழந்தையாக மாறிய பிரதமர் மோடி.. பாத பூஜை செய்து 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்

By vinoth kumarFirst Published Jun 18, 2022, 9:51 AM IST
Highlights

பிரதமர் மோடியின் தாயார் ஹூராபென்னின் 100வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நாளை முன்னிட்டு குஜராத் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று இனிப்பு வழங்கி, பாத பூஜை செய்து பிரதமர் மோடி ஆசிபெற்றார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹூராபென்னின் 100வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நாளை முன்னிட்டு குஜராத் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று இனிப்பு வழங்கி, பாத பூஜை செய்து பிரதமர் மோடி ஆசிபெற்றார்.

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் வீடுகளை பிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார். பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், தனது தாயாரான ஹீராபென்னின் பிறந்தநாளையொட்டி, காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று ஆசிபெற்றார். பின்னர், இனிப்பு வழங்கியதுடன் தயாருக்கு பிரதமர் மோடி பாதபூஜை செய்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்தச் சூழலில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள சாலை ஒன்றுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹூராபென் பெயரை வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!