அக்னிபாத்துக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள்... டெல்லியில் அவசரமாக மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்!!

By Narendran SFirst Published Jun 17, 2022, 10:47 PM IST
Highlights

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லி மெட்ரோவின் மூன்று ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லி மெட்ரோவின் மூன்று ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்றும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லி மெட்ரோவின் மூன்று ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. டெல்லி கேட்,  ஜம்மா மசூதியின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேபோல் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!